நாடு முழுவதும், ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் நாளை முதல் ஆரம்பம்.

மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார அமைச்சு பெற்றோர்களிடம் கோரியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இவ்வாறு கோரிக்கை விடுத்தார். நாடு முழுவதும் உள்ள... Read more »

இந்தியாவில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில், வீழ்ச்சி!

இந்தியாவில் நேற்றையதினம் 15 ஆயிரத்து 906 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினம் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையை விடக் குறைந்தளவிலேயே பதிவாகியுள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் தர வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்திலிருந்து வருகிறது.... Read more »

யாழில் மாப்பாண முதலியார் நினைவாக, பனை வித்துக்கள் நாட்டல்.

யாழ்ப்பாணம் நல்லூர் சைவத் தமிழ் பண்பாட்டு கலைக்கூடத்தினரின் ஏற்பாட்டில் 92 ஆவது அகவையில் காலமாகிய நல்லூர் ஆலய பத்தாவது நிர்வாகியான சிறீ குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் நினைவாக 92 பனை வித்துக்கள் இன்று நாட்டப்பட்டன. செம்மணி வீதியிலுள்ள நல்லூர் ஆலய வரவேற்பு நுழைவாயில் பகுதியில்... Read more »

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணை : வத்திகான் ஆதரவு.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வத்திக்கான் தனது முழு ஆதரவை வழங்கும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வத்திக்கான் கார்டினல் மெல்கம் ரஞ்சித்துக்கு அனுப்பி வைத்துள்ள ஒரு... Read more »

சிறுவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது மிகவும் அவசியமானது: ஷாமன் ரஜிந்த்ரஜித்

கொழும்பு லேடி ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதியான நிலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள கொவிட் சிகிச்சைப் பிரிவுகள் சாதாரண சிகிச்சைப் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற சிறுவர் நோய் தொடர்பான... Read more »

யாழ். நகரைச் சுத்தமாக்கும் செயற்பாட்டில் பொலிஸார்!!

யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகேயின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தலைமையிலான பொலீஸ் அணியினரால் இன்றையதினம் யாழ்.நகரில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த வேலைத்திட்டத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பகுதியினரும்... Read more »

கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினரால் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்ட நிலையில், பல லீற்றர் கசிப்பு, கோடா மற்றும் கசிப்புத் தயாரிப்பிற்கான உபகரணங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் குளத்தின் கரையோர பகுதியில் இரகசியமான முறையில்... Read more »

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, வட மத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை... Read more »

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவினைக் கோரும் சாள்ஸ் எம்.பி!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தினர் உரப்பிரச்சினைக்குத் தீர்வுகோரி, நாளைய தினம் காலை 10 மணிக்கு முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் – உயிலங்குளம் கமநல... Read more »

எரிபொருள் விலை அதிகரிப்பதாக வெளியான தகவல் தவறானது – கம்மன்பில

எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டால் முன்கூட்டியே அது குறித்து அறிவிப்பேன் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவுடன் எரிபொருள் விலை அதிகரிப்பதாக வெளியான தகவல் பிழையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை உயர்த்தப்படுவதாக வெளியான வதந்தியைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள்... Read more »
error: Content is protected !!