மன்னாரில் ‘பிரஜா ஜல அபிமானி’ திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

மன்னார் – நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள ‘பிரஜா ஜல அபிமானி’ குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் சிந்தனையில் உதித்த சௌபாக்கியத்திற்கான இலக்கு... Read more »

எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர் அடையாளம்

மாத்தளை மாவட்டம் இறத்தோட்டை பிரதேசத்தில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக இறத்தோட்டை பிரதேச செயலக அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த பிரதேச செயலகப் பிரிவில் பெரும்போக ஆரம்பக் கட்ட விவசாய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.... Read more »

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரைவில் வாக்களிக்க முடியும்!

வாக்காளர் பதிவு சட்டமூலம் நடைமுறைக்கு வருவதால், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரைவில் வாக்களிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இளைஞர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் நோக்கங்களில் ஒன்றாக இருந்ததுடன் அதற்கேற்ப இளைஞர்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும்... Read more »

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக, பல பகுதிகள் பாதிப்பு.

நாட்டின் பல பாகங்களில் நீடீத்துவரும் சீரற்ற வானிலை காரணமாக, பல பகுதிகளில் அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. கடும் மழை காரணமாக, நுவரெலியா, இராகலை, கந்தப்பளை ஆகிய பிரதேசங்களில் என்றும் இல்லாதவாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் நுவரெலியா, பொரலாந்த, கந்தப்பளை, கல்பாலம், இராகலை, நடுக்கணக்கு, ஐபொரஸ்ட், கோணப்பிடிய,... Read more »

அடுத்த சில மாதங்களில் அதிகரிக்கவிருக்கும் பணவீக்கம்!

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளதன் அடிப்படையில் அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்கக் கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களில் 6 முதல் 7 சதவீதமாக இருந்த பணவீக்கம், அடுத்த சில... Read more »

முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கத் தயார்! – ஹரிசன் அறிவிப்பு

“வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தயாராகவே இருக்கின்றேன்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பி. ஹரிஷன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “யுகதனவி ஒப்பந்த விவகாரத்தால் அரசுக்குள் மோதல் ஆரம்பமாகியுள்ளது. பங்காளிக் கட்சிகள்... Read more »

புதிய ‘ஏ 30’ கொரோனா திரிபு இலங்கையிலும் பரவலடையும் ஆபத்து!

அநேகமான உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தி வரும் ‘ஏ 30’ என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபு தொடர்பில் இலங்கையிலும் பரவும் அச்சுறுத்தல் நிலை இருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்கை விடுத்தார். ஊடங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக்... Read more »

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை இன்றுடன் நீக்கம்!

“கொரோனாத் தொற்று பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை இன்று காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.” என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை நீக்குவதற்கான தீர்மானம் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனாத் தடுப்புச் செயலணிக்... Read more »

பயிர்ச் செய்கையிலிருந்து விலக விவசாய அமைப்பினர் தீர்மானம்! – காய்கறிகளின் விலையும் சடுதியாக அதிகரிப்பு

உரத் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் காய்கறிகள் உள்ளிட்ட ஏனைய பயிர்ச் செய்கையிலிருந்து விலகுவதற்கு விவசாயிகள் தீர்மானித்துள்ளனர் என்று விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கிடைத்துவரும் காய்கறிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக, தற்போது காய்கறிகளின் விலை நூற்றுக்கு... Read more »

புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்! யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்நடாத்தப்படும் போராட்டங்களில்  புலனாய்வாளர்களால்  அச்சுறுத்தல் என யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள  ஐ நா அலுவலகத்திற்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளா முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்  ஊடக்ங்களுக்கு  கருத்து தெரிவிக்கும் ... Read more »
error: Content is protected !!