எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 62 ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிப்பு.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனரும், மறைந்த முன்னாள் ஜனாதிபதியுமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 62 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் கட்சியின் செயலில் உள்ள உறுப்பினர்கள் குழுவும்... Read more »

தியாகி திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கில் அனுஷ்டிப்பு

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாகி திலீபனுக்கான நினைவேந்தலின் இறுதி நாள் இன்றாகும். 1987 செப்டெம்பர் 15 ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அவர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு... Read more »

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு நாளை இலங்கைக்கு விஜயம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூது குழுவொன்று நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தரவுள்ளது. விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹி;ந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ... Read more »

மன்னாரில் ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்!

மன்னார் – மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டிவிருச்சான் பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது, நேற்று இரவு இனம் தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று இரவு குறித்த ஊடகவியலாளர் தனது வீட்டில் இல்லாத நேரத்தில், அவருடைய வீட்டை... Read more »

மொடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகள் வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு மாத்திரமே – இராணுவத்தளபதி

மொடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகள் உயர்கல்வி நோக்கங்களுக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உள்ளூர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த தடுப்பூசிகளை வழங்குவது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த தடுப்பூசிகளைக்... Read more »

மட்டக்களப்பில் விலங்குகளுக்கு தடுப்பூசி!

சுகாதார அமைச்சு மற்றும் பொது சுகாதார மிருக வைத்திய சேவையும் இணைந்து விலங்கு விசர் நோயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் விலங்கு விசர் நோய் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் விலங்கு விசர் நோயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை பிராந்திய நீர்வெறுப்பு... Read more »

வயோதிபப் பெண் படுகொலை; : 25,000 ரூபாய் பணம் கொள்ளை

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராஜகிரிய பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை புகுந்த நபரொருவர், வீட்டில் இருந்த வயோதிபப் பெண்ணை படுகொலை செய்துவிட்டு, சுமார் 25,000 ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளமை தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில், இராஜகிரிய... Read more »

இலங்கை – பங்களாதேஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி ஒக்டோபரில்!

பத்தொன்பது வயதிற்குட்பட்ட இலங்கை மற்றும் பங்களாதேஸ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டித் தொடர் எதிர்வரும் ஒக்டோபரில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள 19 வயதிற்குட்பட்ட பங்களாதேஸ் கிரிக்கெட் அணி இலங்கை அணியுடன் 05 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. உயிர்க்குமிழி முறைமையின் கீழ்... Read more »

நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவது இந்த மரண வீதம் குறைவடைந்தமைக்கான காரணமாகும் என்றும், எதிர்வரும் வாரங்களில் இந்த மரண வீதம் மேலும் குறைவடையும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை... Read more »

நிலாவெளியில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

நிலாவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினரும், நிலாவெளி பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் வோட்டர் ஜெல் எனப்படும்... Read more »
error: Content is protected !!