தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், 551 பேர் கைது.

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலங்களில் 551 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 37 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் நேற்று காலை 6.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை 295... Read more »

கல்முனைப் பிராந்தியத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் கீழுள்ள 13 பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நிலையங்களில், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சைனாபாம் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. சாய்ந்தமருது பொதுச்சுகாதாரப் பரிசோதகர் காரியாலயத்தில் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி யு.எஸ்.எம்.நியாஸின்... Read more »

பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான வழிகாட்டல்கள் அடுத்த சில வாரங்களில்!

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளினால் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கல்வியமைச்சர், ‘பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து கல்வி மற்றும்... Read more »

கொவிட் தடுப்பூசித்திட்டத்தின் மூலம் இலங்கையை சிவப்புப் பட்டியலிலிருந்து நீக்க நடவடிக்கை

கோவிட் தடுப்பூசி நிகழ்ச்சித் திட்டத்தின் வெற்றி மூலம், இலங்கை மீது பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான இராஜதந்திர மட்டக் கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும்... Read more »

கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகலில் மூவர் காயம்

குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்துக்கு, கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் சென்ற கடற்றொழிலாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில், மூவர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் கடற்படையினரின் உதவியுடன் காலி துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில், மாலுமி... Read more »

அதிகாரிகள் இருவரை தாக்கிய ஹம்பாந்தோட்டை நகர முதல்வர் பிணையில் விடுதலை!

பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை நகர முதல்வர் எராஜ் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து கடமையிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் இன்று கைது... Read more »

தேசிய பூங்காவிற்கு வேட்டைக்குச் சென்ற ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் கைது.

சோமாவதி தேசிய பூங்காவிற்கு வேட்டைக்கு சென்ற பொலன்னறுவை மாவட்ட முன்னாள் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் சிட்னி ஜயரத்னவும் அவருடன் சென்ற 15 பேரும் பொலன்னறுவை வனவிலங்கு திடீர் சோதனைப் பிரிவினர் நடாத்திய சிறப்பு சோதனையில், கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று மதியம் தேசியப் பூங்காவின்... Read more »

14 ஆவது ஐ.பி.எல் சீசன் இன்று: சென்னை, மும்பை மோதல்

2021 இந்திய பிரீமியர் லீக் தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டம் இன்றிரவு... Read more »

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு : ஐவர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பி.டி.13 பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று நேற்று வெடித்ததில் 2 பேர் காயமடைந்துள்ளனர். நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில் தலிபான்களை இலக்காக கொண்டு, அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இந்த தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயம்... Read more »

இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்குத் தடை நீக்கம்.

இலங்கை உள்ளிட்ட கறுப்பு பட்டியலிலுள்ள 6 நாடுகளின் பயணிகளுக்கு நாளைமுதல் ஜப்பான் நாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய ஆறு நாடுகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில்... Read more »
error: Content is protected !!