நுவரெலியாவில் அதிபர், ஆசிரியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

நுவரெலியாவில் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை இன்று (1) காலை முன்னெடுத்தனர். ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்குமாறு கோரியும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தை திரும்பப் பெறுமாறும் வலியுறுத்தியும் நாடு பூராகவும் ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும்... Read more »

கொட்டகலையில் பாரிய விபத்து:ஒருவர் மரணம்!

நுவரெலியா திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கொட்டகலை சுரங்க பாதைக்கு முன்னால் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். டிப்பர் மற்றும் முச்சக்கரவண்டி, நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், பலத்த காயங்களுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதியும், அதில் பயணித்த... Read more »

நாவுல பிரதேச செயலகம் மூடப்பட்டது.

நாவுல பிரதேச செயலகத்தில் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பிரதேச செயலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதேச செயலாளர் சிந்தக்க இலங்க சிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை தேர்தல் காரியாலயத்தில் பணியாற்றுகின்ற ஊழியர் ஒருவர் அரச அலுவலுக்காக பணிக்கு வந்துள்ள நிலையில்... Read more »

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வீதியில் வீழ்ந்து மரணம்!: பரிசோதனையில் கொரோனா உறுதி

யாழ்ப்பாணத்தில், வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர், திடீர் என தடுமாறி வீதியோரம் வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது, அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை, பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சுதுமலை மற்றும் உரும்பிராயை... Read more »

அஸ்ட்ராசெனெகா இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு

அஸ்ட்ராசெனெகா இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் அஸ்ட்ராசெனெகா இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (1) காலை 8.30 மணிமுதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக... Read more »

அரச ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணிபுரிவது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து!

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய நாளை முதல் 02 ஆம் திகதிக்கு பின்னர், அனைத்து அரச ஊழியர்களும், வழமை போன்று பணிகளில் ஈடுபடுவதுடன் தொடர்புடைய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சினால், 02ஃ2021 என்ற சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதனப்படையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவற்காக, அரச... Read more »

பியகம பொதுசுகாதார பிரிவில் பல்வேறு கொரோனா கொத்தணிகள்

பியகம பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா கொத்தணிகள் பல உருவாகியுள்ளன என்று, பியகம பொதுசுகாதார பரிசோதகர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார். பியகம பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட கோணவல, கடவத்த, ஹெய்யன்துடுவ ஆகிய பகுதிகளில் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற மூன்று... Read more »

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 125 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 125 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 844... Read more »

சுகாதாரப் பரிசோதகர் மீது மண்வெட்டியால் தாக்குதல்! – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பிரதேசத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரை மண்வெட்டியால் தாக்கிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காயமடைந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியபோது, இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது... Read more »
error: Content is protected !!