தேர்தல் சட்ட சீர்த்திருத்தங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் 7 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

தேர்தல் சட்ட சீர்த்திருத்தங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவினால், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 7 அரசியல் கட்சிகளுக்கு கலந்துரையாடலில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற தகவல்... Read more »

சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக இன்றும் விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ஆராயும் பொலிஸ் குழு இன்றைய தினமும் டயகம பகுதியில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. அதன்படி, குறித்த சிறுமியை வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தரகரின் இல்லத்தில் இன்று விசாரணைகளை... Read more »

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு பலம் – பிரதமர்

நாட்டிற்கு பெரும் தொகையான அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு ஒரு பலம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் குருநாகல் பிராந்திய தூதரகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்விற்கு அலரி மாளிகையில் இருந்தவாறு இணைய... Read more »

எரிகாயங்களுக்குள்ளான 2 பிள்ளைகளின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கட்டைக்காடு முள்ளியானைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயார், தீக் காயங்களுக்குள்ளாகிய நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கட்டைக்காடு, முள்ளியானைச் சேர்ந்த 32 வயதுடைய யோகேஸ்வரன் பாலரஞ்சிதா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தவராவர். தீக் காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த பெண், கடந்த 22ஆம்... Read more »

முறையான நூறு நகரங்களை நாட்டு மக்களுக்கு உரித்தாக்குவோம் – பிரதமர்

அனைவருக்கும் நிலையான நகரத்தின் வசதிகளை அனுபவிக்கக் கூடிய வகையில் முறையான நூறு நகரங்களை நாட்டு மக்களுக்கு உரித்தாக்குவோம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால்... Read more »

ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறைகளை மேம்படுத்த நடவடிக்கை- ஜனாதிபதி

தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுடன், நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும், ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்தத் தயாராக இருப்பதாக, இலங்கை வர்த்தகச் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளது. இலங்கை வர்த்தகச் சங்கத்திற்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள், நேற்று பிற்பகல்,... Read more »

அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு, எதிர்வரும் திங்கட்கிழமை தீர்வு – மஹிந்த ராஜபக்ஷ

அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் முரண்பாடுகள் தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து, இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று, அலரி மாளிகையில், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பில், அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன்... Read more »

நாட்டில், மேலும் 48 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில், நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை, 4 ஆயிரத்து 195 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 28 ஆண்களும், 20 பெண்களும் அடங்குகின்றனர். இதேவேளை,... Read more »

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோல் மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் (49), சென்னை புழல்... Read more »

ஹிஷாலினி விவகாரம்! இலங்கை மனித உரிமைகள் ஆணையம் விடுத்துள்ள கோரிக்கை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய போது உயிரிழந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது. இது குறித்து பொலிஸ்மா அதிபர் மற்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு... Read more »
error: Content is protected !!