“நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை தொடரும்”- வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை தொடர்ந்தும் இயங்குநிலையில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ... Read more »

சிறுமி ஹிசாலினியின் உயிரிழப்பு : இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த 16 வயதுடைய சிறுமி ஹிசாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதன்படி, குறித்த சிறுமியை பணிக்கு... Read more »

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பருவப்பெயர்ச்சி மழையுடன் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாகவும், மேல் மாகாணத்திலேயே பெருமளவானோர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும்... Read more »

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து தெளிவுபடுத்த விசேட செயலமர்வு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவுப்படுத்த விசேட செயலமர்வு ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த செயலமர்வு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செயலமர்வில் ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும்... Read more »

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்தை... Read more »

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் அன்பளிப்பு- சீனத் தூதரகம்

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை மறுதினம் கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அந்த தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக அந்த தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று வரை 84 இலட்சத்து 39 ஆயிரத்து 469 பேருக்கு கொவிட்-19... Read more »

வீடுகளில் தனிமைப்படுத்துவது இலங்கை போன்ற நாடுகளுக்கு சரியானதல்ல – பேராசிரியர் கிறிஷாந்த அபேசன

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவது, இலங்கை போன்ற நாடுகளுக்கு உசிதமான தீர்மானம் அல்ல என்று பேராசிரியர் கிறிஷாந்த அபேசன தெரிவித்துள்ளார். தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்... Read more »

இறக்குமதி வரையறை ஒளடதங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் – தேசிய புத்திஜீவிகள் அமைப்பு.

இறக்குமதிக்கான வரையறையானது, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் தாக்கம் செலுத்தலாம் என்று தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பிரதான செயலாளர் விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. நாட்டின்... Read more »

எரிபொருள் விலைக் குறைப்புக்கு சாத்தியம் இல்லை- உதய கம்மன்பில

நாட்டில் எரிபொருள் விலைக் குறைப்புக்கு எந்தச் சாத்தியப்பாடும் இல்லை. இப்போதுள்ள நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பைத் தவிர மாற்று வழிகள் இல்லை என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். எரிபொருள்... Read more »

ரிசார்ட் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே கவலை.

ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி உடனடியாக நிறைவேற்றப்படுவதானது, இதுபோன்ற மேலும் பல சிறுவர்கள் பாதுகாப்புப் பெறுவதற்கு காரணமாக அமையும் என பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஒன்றியத்தின் தலைவரான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த... Read more »
error: Content is protected !!