தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

இலங்கை தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தப் பட்டுள்ளன. மறு அறிவித்தல் வரும் வரை சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா தொற்றை கருதிட்கொண்டு மேட்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவகத்தின் தலைவரான சவேந்ர கமகே தெரிவித்துள்ளார். இலங்கை தேசிய... Read more »

அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு!

பரீட்சைகள் திணைக்களத்தினால் மே மாதத்தில் நடத்தப்படவிருந்த அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். மீள அறிவிக்கும் வரையில் இவ்வாறு பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொவிட் 19 பரவல் காரணமான இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக... Read more »

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலம் நீடிப்பு

ஏப்ரல் முதலாம் திகதி முதல் எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் வரையான காலப்பகுதிக்கு காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, காலாவதியாகும் திகதியில் இருந்து மேலும் 6 மாதங்களுக்கு குறித்த சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் என மோட்டார்... Read more »

ஒக்சிசன் செயற்கை சுவாசகருவிகளுக்கு சீனாவின் உதவியை நாடினர் பிரதமர்.

நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சீனாவிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஒக்சிசன் செயற்கை சுவாசகருவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். விரைவில் இவற்றை இலங்கைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் இதனை சீன தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்தியா உட்பட இன்னும் பல நாடுகள்... Read more »

இந்தியாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை

வைத்திய நோக்கத்திற்காக அல்லது வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு சென்றிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும், இரண்டாயிரம் கட்டில்களைக்... Read more »

15 கொவிட் மரணங்கள் – முழு விபரம் இணைப்பு!

2021 மே மாதம் 06 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 09 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 தொற்றாளர்கள் 15 பேரின் மரணம் தொடர்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றைய தினம் (09) உறுதி செய்துள்ளார். அதற்கமைய இலங்கையில்... Read more »

9 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தில் 9 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி ,கிரியெல்ல, எலபாத்த, பலாங்கொடை, இம்புல்பே, வெலிகேபொல மற்றும் ஓப்பநாயக்க ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ... Read more »
error: Content is protected !!