நாட்டின் மேலும் இரு பகுதிகள் முடக்கம்!

நுவரெலியா, திருகோணமலை மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த கொத்மலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பனன்கம்மன கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின்,... Read more »

கொடிகாமத்தில் இராணுவத்தினரால் தொற்று நீக்கி விசிறும் செயற்பாடு முன்னெடுப்பு.

யாழ்ப்பாணம் – கொடிகாமத்தில் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு இன்றையதினம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, கொடிகாமம் பகுதியில் கடந்த வாரத்தில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து கொடிகாமம் நகர்ப்பகுதி, சந்தை கடைத்தொகுதி மற்றும் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.... Read more »

யாழில் அதிகரிக்கும் தொற்று!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில்... Read more »

நாட்டில், நேற்று மட்டும் ஆயிரத்து 939 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து, 529 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மேலும் ஆயிரத்து 939 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இந்த தொற்றாளர்கள் அனைவரும், சித்திரைப் புத்தாண்டு கொத்தணியுடன்... Read more »

வலயக்கல்விப் பணிப்பாளர் கடமையேற்பு

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளராக நியமனம் பெற்ற சுரேந்திரன் அன்னமலர் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள தெற்கு வலயக்கல்வி அலுவலகத்தில் நேற்;று மாலை உத்தியோக பூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்று கையொப்பமிட்டார். வவுனியா தெற்கு வலயத்தின் கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய... Read more »

வாழ்வகம் இல்ல மாணவி பரீட்சையில் சாதனை

யாழ்ப்பாணம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் கல்வி கற்று, உயர் தரப் பரிட்சைக்கு தோற்றிய, பார்வை இழந்த ஜெயராசன் லோகேஸ்வரி என்ற மாணவி, கலைத்துறையில் 2ஏ பி பெறுபேற்றை பெற்று, மாவட்ட மட்டத்தில் 38 ஆவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். வல்வெட்டித்துறையில், ஏழைக் குடும்பத்தில்... Read more »

யாழ்: மணற்காடு சவுக்குக் காட்டில் தீப்பரவல்

யாழ்ப்பாண மாவட்டம், வடமராட்சி மணற்காடு சவுக்கு காட்டில், நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டது. தீப்பரவை அடுத்த, அப்பகுதி இராணுவத்தினர், தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அந்தவகையில், தீ பரவிய இடங்களுக்கு, மணல் இட்டு, தீ பரவாதிருக்க நடவடிக்கை எடுத்தனர். இந்த தீ மூலம், சவுக்கு... Read more »

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழுத் தலைவராக பிரதமர்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54ஆவது பொதுக் கூட்டத்தில் 2021-2022 ஆண்டிற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டார். ஜோர்ஜியாவின் டிபிலிஸில் நடைபெறவிருந்த இந்த பொதுக் கூட்டம் தற்போது நிலவும் தொற்று நிலைமை காரணமாக இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக... Read more »
error: Content is protected !!