யாழ்.மேயரின் கைது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சி : சஜித்

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனைக் கைது செய்ததன் மூலம் நாட்டு மக்களைத் திசை திருப்பி, 2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகள் தொடர்பில் விசாரிப்பதை அரசு நிறுத்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற... Read more »

யாழ்.திருநெல்வேலி பொதுச்சந்தை மீளத் திறப்பு!

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்து யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைத் தொகுதி இரண்டு வாரங்களின் பின்னர் மீளத் திறக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொதுச் சந்தையில் வழமையாக 300இற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடும் நிலையில், பி.சி.ஆர் அறிக்கையின் அடிப்படையில் இன்று 55... Read more »

நாட்டில், கொரோனாத் தொற்று மரணங்கள் 596 ஆக அதிகரிப்பு.

நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 596 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உடஹென்தென்ன பகுதியைச் சேர்ந்த, 56 வயதுடைய ஆண், கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், மேலும் 268 புதிய... Read more »

பாற்பண்ணைக் கிராமத்தில் பாரதிபுரம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் விடுவிப்பு

திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் பாரதிபுரம் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதி கண்காணிப்பு வலயத்திலிருந்து நாளை காலை 6 மணி முதல் விலக்கப்படுகிறது. இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். ‘திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் 14 நாள்களாக கண்காணிப்பு... Read more »

நாளை மோட்டார் போக்குவரத்து திணைக்கள சேவைகளை நடத்த முடிவு

நாளைய தினம் விசேட பொது விடுமுறை என்றாலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வழக்கம் போல் தனது சேவைகளை நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, நாரஹேன்பிட்டி, வெரஹெர, குருநாகல், கம்பஹா, அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டை அலுவலகங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் சேவைகளை வழங்கவுள்ளன. நாரஹேன்பிட்டி... Read more »

மாகாண சபைத் தேர்தல் இறுதி முடிவு எதிர்வரும் 19 ஆம் திகதி : மஹிந்தானந்த

மாகாண சபைகளுக்கான தேர்தலை எந்தத் தேர்தல் முறையில் நடத்துவது என்பது குறித்து எதிர்வரும் 19 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகள்... Read more »

புகையிரதக் கடவை இன்றி அச்சத்தில் முல்லை. பனிக்கன்குளம் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் புகையிரத வீதியின் 302.5 ஆவது கிலோமீற்றர் பகுதியில் புகையிரத கடவை ஒன்றினை அமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவை இல்லாததன் காரணமாக... Read more »

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டோர் கைது

மட்டக்களப்பு – எறாவூர்ப் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வியாபாரத்திற்குப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் முச்சக்கர வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து ஒரு தொகுதி போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக... Read more »
error: Content is protected !!