சுமந்திரனின் வாகனம் விபத்து: அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துச் சம்பவம் பதிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பில், கல்முனை நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பங்கேற்பதற்காக சென்ற போது, வாகனம் விபத்தில் சிக்கியது. இன்று காலை கட்டுநாயக்கவிற்கு அண்மையில், அதிக வேக நெடுஞ்சாலையிலேயே வாகனம் விபத்துக்குள்ளாகியது. வாகனம்... Read more »

கூட்டுச் செயற்பாடுகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!

இலங்கையில் அனைத்து மத வழிபாட்டு இடங்களிலும் கூட்டுச் செயற்பாடுகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் அனைத்து மத... Read more »

இரத்து செய்யப்படும் ரயில் சேவைகள்

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான சில ரயில் சேவைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் இரத்து செய்யப்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் 3 ஆம் திகதி வரை மூன்று கட்டங்களாக ரயில்... Read more »

கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த சந்திப்பு

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்துள்ள நிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார். இரு தரப்பு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்திய பிரதமர்... Read more »

இனத்தை இலக்கு வைத்து புர்கா தடை செய்யப்படவில்லை : கமல் குணரத்ன

ஏதாவது ஒரு இனத்தை, மதத்தை இலக்கு வைத்து புர்கா தடை தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொதுவாக நாம் அனைத்து வழிகளிலும் முகத்தை மூடுவதை நாம் தடை... Read more »

பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த மூவர் கஞ்சாவுடன் கைது

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இந்தக் கைது நடவடிக்கையை முன்னேடுத்தனர். பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த 20, 31 மற்றும் 38 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.... Read more »

விமான நிலையங்களை மூடத் தீர்மானமில்லை : பிரசன்ன

புதிய கொரோனா தொற்று வகைகள் கண்டறியப்பட்ட போதிலும், இலங்கையின் விமான நிலையங்களை மூட அரசாங்கம் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனினும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தரும்போது பாதுகாப்பு செயல்முறைகள் பின்பற்றப்படும்... Read more »

வைரஸிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதில் அதிக அவதானம் தேவை – ஹர்ஷ சதிஷ்சந்திர

நாட்டில் தற்போது இனங்காணப்பட்டுள்ள நிலைமாறிய வைரஸ் சிறுவர்களை அதிகளவில் பாதிப்பதாக எந்தத் தரவுகளும் பதிவாகவில்லை. எவ்வாறிருப்பினும் இதன் தாக்கத்திலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதிலும் அனைவரும் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என மருத்துவர் ஹர்ஷ சதிஷ்சந்திர தெரிவித்துள்ளார். பி.117 வைரஸ் மூலம் பிரித்தானியாவில் கடந்த ஜனவரி... Read more »

ஒன்லைன் மூலம் மே தினப் பேரணி!

இலங்கையில் தற்போதுள்ள கொவிட் வைரஸ் தொற்று நிலைமை காரணமாக மே தினப் பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஒன்லைன் மூலம் மக்கள் விடுதலை முன்னணியின் மே தினப் பேரணி இடம்பெறும். உழைக்கும் சமூகத்துக்காகவும், அடக்குமுறையை மேற்கொள்ளும் தலைவர்களிடமிருந்து... Read more »

ஐ.தே.கவிலிருந்து தங்களை நீக்குவதற்கு எதிராக உறுப்பினர்கள் நீதிமன்றில் மனுத்தாக்கல்!

தங்களை ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நீக்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை நிறுத்துமாறு கோரி அந்த கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சிலர் தாக்கல் செய்துள்ள மனுவினை விசாரணைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்படுமா? இல்லையா என்பது குறித்த உத்தரவு... Read more »
error: Content is protected !!