
புதிய அரசியலமைப்பு தொடர்பான வரைபில், சுகாதார சேவையை அத்தியவசிய சேவையாக உள்ளடக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆலோசனை வழங்கியுள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன், அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, அச்சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய முன்வைத்த கோரிக்கைக்கு, பிரதமர் இவ்வாறு இணக்கம்... Read more »

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு, அனைத்து சுகாதார ஏற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். மீகஹதென்ன மிரில் காரியவசம் பாடசாலைக்கு விஜயம் செய்து பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்களின் சுகாதார வழிமுறைகள் குறித்து பரிசீலனை செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »

வடக்கு மாகாணத்தில், மேலும் 16 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 3 பேர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எனவும், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ... Read more »

நாட்டில், கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 476 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டில், இன்று மேலும் 303 பேருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார... Read more »

ஓமான் வளைகுடாவில், இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் மீது, கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில், ஈரான் இருப்பதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சுமத்தியுள்ளார். இஸ்ரேலிய பொது ஒளிபரப்பு நிறுவனமான கானுக்கு, இன்று வழங்கிய நேர்காணலில், இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். எனினும், அந்த... Read more »

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு நீதி கிடைக்காமையை முன்னிறுத்தி, எதிர்வரும் 7 ஆம் திகதியை, ‘கறுப்பு ஞாயிறு’ தினமாக அனுஷ்டிக்குமாறு, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உறவுகளை இழந்த... Read more »

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பிரதி, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையை, கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் வைத்து, ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர்... Read more »

நாட்டில், இன்று மேலும் 192 பேருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 83 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது. இந்த தொற்றாளர்கள் அனைவரும், ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில்... Read more »

2020 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தரா தர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் வருகை, திருப்திகரமாக அமைந்துள்ளதாக, பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த விசேட பரீட்சை மத்திய நிலையத்தில், 38 பேர் பரீட்சைக்கு... Read more »

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு கூட்டம் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தலைமையில் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. ஐக்கிய தேசிய கட்சியை மாவட்டத்தில் புனரமைக்கும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கே.லிங்கராசா மற்றும் மாவட்ட முகாமையாளர் எல்.பிரதாப் ஆகியோரின் ஒழுங்கமைப்பில்... Read more »