மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர், ஜெனிவா நகரில், இன்று மாலை ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத்தொடர், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இணையவழி காணொளி ஊடாக இடம்பெறுகின்றது. இன்று ஆரம்பமான கூட்டத்தொடர், எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி வரை... Read more »

சிறுபான்மை மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரிப்பு : அன்ரோனியோ குட்ரெஸ்

உலக நாடுகளில், கொரோனா தொற்றுப் பரவலின் மத்தியில், தற்போது அதிகரித்துள்ள, அடிப்படைவாதம், அடக்குமுறைக்கு உள்ளாக்கல், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட அனைத்தும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்ரெஸ் வலியுறுத்தியுள்ளார். இன்று, ஜெனிவாவில் ஆரம்பமாகி இருக்கும்,... Read more »

இந்தியாவுடனான உறவு முறியவில்லை : பீரிஸ்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராக, இந்திய அரசாங்கம் செயற்படாது எனவும், ஜெனிவா விவகாரம் தொடர்பில், ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார். இந்தியா... Read more »

கொரோனா : மேலும் 811 பேர் குணமடைவு

நாட்டில், கொரோனா தொற்றில் இருந்து, இன்று மேலும் 811 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 75 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம், இன்று மாலை... Read more »

மினுவாங்கொட பகுதியில், 25 பேர் கைது : அஜித் ரோஹண

மினுவாங்கொட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள காணொளிப் பதிவில், இந்த தகவலை வெளியிட்டார். மினுவாங்கொட... Read more »

நுவரெலியா நானு ஓயாவில் விபத்து : 13 பேர் படுகாயம்

நுவரெலியா நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில், பேருந்து விபத்திற்குள்ளானதில், 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். மொனராகலை பகுதியில் இருந்து, தலவாக்கலை... Read more »

கொரோனா மரணம் அதிகரிப்பு : ஹரித

  கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இது ஆபத்தான விடயம் எனவும். அரச வைத்திய அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், இவ்வாறு குறிப்பிட்டார். நூற்றுக்கு 70 வீதமான மரணங்கள்... Read more »

மல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் கலந்துரையாடி, இறுதி முடிவு : பீரிஸ்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் கலந்துரையாடி, இறுதி முடிவை எடுக்க வேண்டும் என, கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »

ரஸ்யாவில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல்!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஸ்யாவில் பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பறவை காய்ச்சல் பரவியுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். பறவை காய்ச்சல் முதன் முறையாக மனிதர்களுக்கு பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரஸ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய பேரவையுடன் இணையாது – செ.கஜேந்திரன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ. கஜேந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேசின. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தக்... Read more »
error: Content is protected !!