கழிவு தேயிலை தூளுடன், 2 பேர் கைது!

நுவரெலியா கொட்டகலை கொமர்ஷல் பகுதியில், சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால், இன்று மதியம் 12.00 மணியளவில், கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் வைத்து, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.... Read more »

மூக்குப் பொடி பண்டல்கள் பறிமுதல்!

இந்தியா இராமேஸ்வரம் மண்டபம் அருகே உள்ள, வேதாளை கடற்கரையில் இருந்து, கள்ளத் தோணியில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 30 கிலோ மூக்குப் பொடி பண்டல்கள், மண்டபம்; சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் இராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் இருந்து, மூக்கு... Read more »

து.ரவிகரனிடம், முல்லைத்தீவு பொலிஸார் வாக்குமூலம்!

தமிழ் மக்களுக்காகவும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், அமைதியான முறையிலே, பிறருக்கு இடையூறுகள் ஏற்படுத்தாத வகையில், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் ஈடுபடுபட்டதாக, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டத்தில்... Read more »

பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு : அத்துரலிய தேரர்

நாடு பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்த, நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார். மனிதரே மனிதரை பார்த்து அஞ்சும் நிலையிலேயே தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எதிர்வரும்... Read more »

நிரந்த நியமனம் வழங்க கோரிக்கை!

அரச சேவையில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் சிலர், கொழும்பில் இன்று பேரணியை முன்னெடுத்தனர். இதுவரை தமது சேவையை நிரந்தரமாக்கவில்லை என குற்றம் சுமத்தி அவர்கள் இந்த பேரணியை முன்னெடுத்திருந்தனர். கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு அருகில் ஆரம்பமான இந்த எதிர்ப்பு பேரணி சுற்றுவட்டத்தின் ஊடாக கொள்ளுப்பிட்டி வரை... Read more »

புதிய வைரஸ் கொரோனா : பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் : சுதர்ஷனி

நாட்டில், தற்போது அடையாளம் காணப்படும், புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் வசிக்கும் பகுதிகளில், பயணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கொவிட்-19 தொற்று தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளுக்கு வெளியே, வைரஸ் பரவுவதை குறைப்பதற்காக, பயணக் கட்டுப்பாடுகள்... Read more »

வடக்கில் மேலும் 6 பேருக்கு, கொரோனா!!

வடக்கு மாகாணத்தில், இன்று மேலும் 6 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில், 793 பேரின் மாதிரிகள், கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன் போது, கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும், மன்னார் மாவட்டத்தில்... Read more »

ஜனாசா விவகாரம் : உடனடி தீர்வு அவசியம் : மரிக்கார்

கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில், சுகாதார துறையின் தீர்மானம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று, கொழும்பில், எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »

சுகாதார அமைச்சர் நலமடைய வேண்டி விசேட வழிபாடு

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி விரைவில் நலமடைய வேண்டி ஆசீர்வாத வழிபாடொன்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றுள்ளது. சுகாதார அமைச்சருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவருடைய உடல்... Read more »

புதுக்குளம் கனிஸ்ட மகா வித்தியாலயத்தில் மர நடுகை விழா

ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், சௌபாக்கிய கொள்கையின் அடிப்படையில், ‘குழந்தைகளுக்கான மரத்தோட்டம்’ என்ற தொனிப்பொருளில், தேசிய மர நடுகை வேலைத்திட்டத்தின் ஆரம்ப விழா, வவுனியா புதுக்குளம் கனிஸ்ட மகா வித்தியாலயத்தில், இன்று காலை இடம்பெற்றது. வவுனியா மாவட்டச் செயலகத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நிகழ்வில், முதன்மை அதிதியாக,... Read more »
error: Content is protected !!