மன்னார் மாவட்டத்தில் 2ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 2 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள வைத்தியர் ரி.வினோதன், ‘மன்னார் மாவட்டத்தில் நேற்று மேலும் 23 பேர் புதிதாக கொரோனா தொற்றுடன் அடையாளம்... Read more »

நாட்டில் நாய்களுக்கு புதுவித வைரஸ் பரவி வருகின்றது.

இலங்கையில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களுக்கு புதுவித வைரஸ் பரவி வருகின்றது. அடையாளம் காணப்படாத இந்த வைரஸால் இதுவரை நாட்டின் பல இடங்களிலும் வளர்ப்பு நாய்கள் பல மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கால்நடை மருத்துவர் சுகத் பிரேமச்சந்திர, தொடர் வயிற்றோட்டம், இரத்த... Read more »

மத நம்பிக்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி : திஸ்ஸ விதாரண

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்தப் பிரச்னையும் இல்லை என்ற விசேட வைத்திய குழுவின் அறிக்கையை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட பிரதான குழுவுக்கு வழங்கியதன் மூலம் எதுவும் ஏற்படப்போவதில்லை. விசேட குழுவின் அறிக்கையை ஆராய்ந்து பார்க்கும் அளவுக்கு பிரதான குழுவில் வைரஸ் தொடர்பான... Read more »

உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முறைப்பாடு!

ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளது. இணையத்தில் காணப்படுகின்ற சில புகைப்படங்கள் உதயங்க வீரதுங்கவின் உதவியுடன் இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் தொல்லியல் சட்டங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை பின்பற்ற... Read more »

கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய விவகாரம்!

கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் இணக்கம் வெளியிட முடியாது என அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வாத்துவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை... Read more »

சுங்கத் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வழக்கிலிருந்து விடுவிப்பு

வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரிடம் 50 லட்சம் ரூபர் கையூட்டலாக கோரி அதில் 10 லட்சத்தினை பெற்றமை உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுக்களின் கீழ் சுங்க தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கே.ரஞ்சனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர்... Read more »

சிசு தகனம் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளிலிருந்து நீதியரசர் ஒருவர் விலகல்.

21 நாட்களேயான சிசுவை தகனம் செய்தமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு விசாரணைகளிலிருந்து தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவதாக உயர் நீதிமன்ற நீதியரசர் யு.ர்.ஆ.னு.நவாஸ் பகிரங்க நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். தகனம் செய்யப்பட்ட சிசுவின் பெற்றோரால் இந்த அடிப்படை உரிமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.... Read more »

நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அதிகரிப்பு

நாட்டில், மேலும் 787 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 56 ஆயிரத்து 968 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம்,... Read more »

சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்து கொள்ளும் சலுகை காலம் நீடிப்பு.

சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்து கொள்வதற்கான சலுகை காலம் மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவி வரும் கொவிட் நோய்த் தொற்று பரவுகை நிலமையினால் தவணைக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையில் சாரதி... Read more »

“துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை” : ஐ.தே.க

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தையோ அல்லது கொழும்புத் துறைமுகத்தின் எந்தப் பகுதியையும் இந்தியா, ஜப்பான் அல்லது வேறு எந்த நாட்டிற்கும் விற்பனை செய்வதற்கு 2019 இல் தமது அரசாங்கம் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. எனினும் முனையத்தை ஒரு நிறுவனத்திற்கு... Read more »
error: Content is protected !!