சீனாவில், நிலத்தடியில் சிக்கிய தொழிலாளர்கள்!

சீனாவில், நூற்றுக்கணக்கான மீட்டர் நிலத்தடியில் சிக்கியுள்ள, சுரங்கத் தொழிலாளர்கள் குழுவைக் காப்பாற்ற, இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகலாம் என, சீன மீட்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன. ஹூஷன் தங்கச் சுரங்கத்தில், கடந்த 10 ஆம் திகதி வெடிப்பின் பின்னர் ஏற்பட்ட சரிவினால், சுரங்கத்திற்குள் 12 பேர்... Read more »

மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய ஆணைக்குழு அமைப்பு!!!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும், மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்ந்து, செயற்பட்ட விதம் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், மூவரடங்கிய ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.நவாஸ் தலைமையில், கடந்த 20... Read more »

இலங்கை தொடர்பில், சர்வதேசப் பொறிமுறை : சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கை குறித்து, சர்வதேச பொறிமுறை ஒன்றை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உருவாக்க வேண்டும் என, சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின், 46 ஆவது அமர்விற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின்... Read more »

சக வாழ்வு சங்கங்களுடனான திட்ட அறிமுக நிகழ்வு!!

தேசிய மொழிகள் சகவாழ்வு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழான அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சகவாழ்வுக்கு சங்கங்களுடனான திட்ட அறிமுக நிகழ்வு இன்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையம் தேசிய மொழிகள் நிதியத்தின் நிதி... Read more »

இலங்கை மத்திய வங்கி அறிக்கை!

சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் தொலைபேசிக் கட்டணம் செலுத்தும் விண்ணப்பங்கள் மூலம், பல வகையான நிதி மோசடிகள் மற்றும் மோசடிகள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த மோசடிகளில் பெரும்பாலானவை, வலை அல்லது தொலைபேசி பயன்பாட்டு அடிப்படையிலான,... Read more »

ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியை, இலங்கையில் பயன்படுத்த, அனுமதி!!

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை, இலங்கையில் அவசர கால தேவைகளுக்கு பயன்படுத்த, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார். நாட்டில், கொரோனாத் தொற்று உறுதியான நோயாளிகளுக்கு, ஒக்ஸ்போட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை செலுத்துவது மிகச்... Read more »

இந்திய மீனவர்களை கண்டித்து, கதவடைப்பு போராட்டம்!!

கறுப்புக் கொடிகளைப் படகுகளில் கட்டியவாறு, மீன்பிடிக்க வருவோம் என, இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளமையைக் கண்டித்து, யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர்கள் சமாசம், வடக்குத் தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரியுள்ளது. அதற்கான ஒன்றுகூடல், இன்று, வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் இடம்பெற்ற... Read more »

ஈ.ரி.ஐ மோசடி, இதுவரை நடவடிக்கை இல்லை : அனுஷா!!

எதிரிசிங்க நம்பிக்கை நிதிய மோசடி தொடர்பான வழக்கு விசாரணைகள், காலம் கடத்தப்படுகின்றமை தொடர்பில், நீதி ஆணைக்குழுவில் முறையிடத் தீர்மானித்துள்ளதாக, எதிரிசிங்க நம்பிக்கை நிதியத்தில் முதலீடு செய்தவர்களை பாதுகாப்பதற்கான சுயாதீன சங்கத் தலைவர் அனுஷா ஜெயந்தி தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு... Read more »

கொரோனா : குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு!!

நாட்டில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இருந்து, மேலும் 633 பேர், இன்று, பூரண குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 48 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு... Read more »

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் விளக்கமறியலில்!!

வவுனியா நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர், இன்று ஆஜராகிய நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில், வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததுடன், தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின்... Read more »
error: Content is protected !!