அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் கமலா ஹரிஸ்

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் கமலா ஹரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் பதவியேற்றார். Read more »

இந்திய மீனவர்கள் இருவரது சடலங்கள் மீட்பு!!

இலங்கை கடற்பரப்பிற்குள், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு, யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்த, மீனவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு, கடற்படையினரால், இந்த தகவல் இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை கடற்பரப்பில், இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.... Read more »

மன்னாரில், மேலும் 18 பேருக்கு கொரோனா!

மன்னார் மாவட்டத்தில், மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில், மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும் 2 ஊழியர்களும் அடங்குகின்றனர் எனவும், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மாதிரிகள் பெறப்பட்ட... Read more »

யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி சர்வ மதத் தலைவர்களுடன் சந்திப்பு

யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பியந்த பெரேரா, நேற்று கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், யாழ்ப்பாணத்திலுள்ள சர்வ மதத் தலைவர்களைச் சந்தித்துள்ளார். யாழ். நாக விகாரை விகாராதிபதி, யாழ். மறை மாவட்ட ஆயர், நல்லூர் ஆதீன முதல்வர், வைகுந்தன் ஆதீன... Read more »

உணவுத் தவிர்ப்பு : இருவரின் உடல் நிலை பாதிப்பு

9 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும், கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுவுறவுச் சங்க தொழிலாளர்கள் இருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுவுறவுச் சங்கத்தில், இறுதியாக இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி, 5 பேர் கொண்ட... Read more »

மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது : பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

அடிப்படை வசதிகள் அற்ற பாடசாலைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹோமாகம – மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியின் 10 ஆவது வருட நிறைவு விழாவில் காணொளி ஊடாக பங்கேற்ற வேளை இவ்வாறு குறிப்பிட்டார். தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை... Read more »

நாட்டில், மற்றுமொரு கொரோனா மரணம் பதிவு!

நாட்டில், கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 53 வயதுடைய பெண் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில், மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின்... Read more »

தமிழ் மக்களை இலக்கு வைத்து அடக்குமுறை : கஜேந்திரகுமார்

குருந்தூர் மலையில், அகழ்வு ஆராய்ச்சி என்ற பெயரில், விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில், இவ்வாறு குறிப்பிட்டார். குருந்தூர் மலை பிரதேச இடத்தை, தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்து வருகின்றது. எனினும், 1933 ஆம் ஆண்டில்... Read more »

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரியாவிடை உரை!

தமக்குரிய கடமைகளை, செவ்வனே செய்து முடித்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது பிரியாவிடை உரையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரும் சவால்கள், மிகவும் கடினமான போராட்டங்களை, நாம் பொறுப்பெடுத்து செயற்பட்டோம். அதற்காகவே மக்கள் எம்மை தெரிவு செய்தனர். புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில்,... Read more »

அமெரிக்கா ஜனாதிபதியாக, ஜோ பைடன் பதவியேற்கிறார்!!

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக, ஜோ பைடன் இன்று பதவியேற்கின்றார். துணை ஜனாதிபதியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பொறுப்பேற்கவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து வெற்றி பெற்றார். இந்த நிலையில்,... Read more »
error: Content is protected !!