பி.சி.ஆர் பரிசோதனை: லக்ஸ்மன் கிரியெல்லவிற்குத் தொற்றில்லை!

நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்லவுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், அவருக்குத் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுடன் நெருங்கிப் பழகிய 31 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில்,... Read more »

புகையிரத சேவைகள் வழமைக்கு…

கொரோனா தொற்று காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பல புகையிரத சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி பிரதான புகையிரத மார்க்கத்தின் 20 புகையிரத சேவைகளும், கரையோர புகையிரத மார்க்கத்தின் 12 புகையிரத சேவைகளும், வடக்கு மற்றும் களனிவெளி புகையிரத மார்க்கத்தின் ஊடாக 4... Read more »

நாடாளுமன்ற செயற்பாடு தொடர்பில், படைக்கல சேவிதர் அறிவிப்பு

நாடாளுமன்ற பணிக்குழாம் அங்கத்தவர்களிடம், நாளையும், நாளை மறுதினமும் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெறும் என, படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொவிட் தொற்று... Read more »

மழையுடனான வானிலை தொடரும்- வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில்... Read more »

ஜனாதிபதி – பங்களாதேஷின் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் முகம்மத் ஆரிபுல் இஸ்லாம், நேற்று முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார். ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழவைத் தொடர்ந்து, ஜனாதிபதிக்கும், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகருக்குமிடையில் கலந்துரையாடலும் நடைபெற்றது. இதன்போது, இலங்கையின் தற்போதைய... Read more »

ஐ.தே.க செயற்குழுக் கூட்டம் நாளை

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், நாளை நடைபெறவுள்ளது. இழுபறி நிலையிலுள்ள கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் இதன்போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக, கட்சியின் உயர்மட்டம் அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு... Read more »

சுமந்திரன் எம்.பிக்குத் தொற்றில்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், நாடாளுமன்றில் அவரோடு உரையாடிய, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுயதனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் நேற்றைய தினம் எம்.ஏ.சுமந்திரனிடம் பி.சி.ஆர் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகிய... Read more »

விசேட குழு நியமனம்: உள்ளூராட்சித் தேர்தல் முறைமை மீள்பரிசீலனை!

உள்ளூராட்சித் தேர்தல் முறைமையை மீள்பரிசீலனை செய்வதற்காக மூவர் அடங்கிய குழுவை அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் நியமித்துள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளரும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான ஆர்.ஏ.ஏ.கே ரணவக்கவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவில்,... Read more »

மூன்று எம்.பிக்களுக்குக் கொரோனா: 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலில்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்குக் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில் தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பில் தீர்மானிப்பதற்காக கட்சி தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில்... Read more »

கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 949 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனாத் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை... Read more »
error: Content is protected !!