13 ஆவது திருத்தம் அவசியம் என்றால், மாகாண சபை தேர்தலை பிற்போட முடியாது – அமுணுகம!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அவசியம் என்றால், மாகாண சபை தேர்தலை தொடர்ந்து பிற்போட முடியாது என, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்ட, பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில், பல... Read more »

மதுபோதையில் வாகனம் செலுத்திய 253 சாரதிகள் கைது!

புத்தாண்டு தினத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 253 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று, ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளியில் இவ்வாறு குறிப்பிட்டார். புத்தாண்டு தினத்தில், நாடளாவிய ரீதியில்... Read more »

மெனிங் சந்தையில், 7 பேருக்கு தொற்று!

கம்பஹா மாவட்டம், பேலியகொட பகுதியில், அண்மையில் திறந்து வைக்கப்பட்ட புதிய மெனிங் சந்தையில், 7 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய மெனிங் சந்தையில், எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்கு பொது சுகாதார... Read more »

போதைப்பொருள் வலயமைப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் : கமால் குணரத்ன

மலர்ந்துள்ள புத்தாண்டில் பிரிவினைவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் இடமில்லை என, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். எதிர்வரும் காலங்களில், ஆயுதங்களை எடுக்க, எவரையும் அனுமதிக்கப் போவதில்லை. சிறைச்சாலையின் இடக் கட்டுப்பாடுகள் மற்றும் சிறைகளில் கொரோனா வைரஸ்... Read more »

அனைவரும், மன உறுதியுடன் இருக்க வேண்டும் : சஜித்

எதிர்கால சவால்களை, கூட்டு நடவடிக்கை மற்றும் புரிதல் மூலம் சமாளிக்க வேண்டும் எனவும், அதற்கு அனைவரும், உறுதியுடன் இருக்க வேண்டும் எனவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க, போரோ புரான விகாரையின் ஒரு கிளையான, ஸ்ரீ தம்ம விஜிதஸ்ரமாயாவின்... Read more »

கடந்த 24 மணித்தியாலயத்திற்குள், 23 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில், இதுவரை 2 ஆயிரத்து 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று, ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளியில் இவ்வாறு குறிப்பிட்டார். கொழும்பில் 6 பொலிஸ் பிரிவுகளும், அவிசாவளை,... Read more »

திருகோணமலை மத்திய வீதி மூடல்!

திருகோணமலை மத்திய வீதியில் அமைந்துள்ள, பிரபல சப்பாத்து கடையில் பணிபுரியும் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில், அவர் உட்பட 4 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால், நேற்று பகுதியளவிலும், இன்று முழு அளவிலும், மத்திய... Read more »

சுட்டுக் கொலை செய்யப்பட்ட பல்கலை மாணவர்களின் நினைவேந்தல் இன்று.

2006 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 2 ஆம் திகதி, திருகோணமலை கடற்கரையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட, 5 பல்கலைக்கழக மாணவர்களின் 15 ஆம் வருட நினைவேந்தல், இன்று நடைபெற்றது. இன்று காலை 10.45 மணியளவில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின், திருகோணமலை மாவட்ட... Read more »

தீவக வைத்தியசாலைகள் புறக்கணிப்பு!

யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை காணப்படுவதனால் தீவக மக்கள் மருத்துவ தேவைகளை உரிய நேரத்தில் பெற முடியாத அவல நிலை காணப்படுவதாக பொது வைத்திய நிபுணர் கல்பனா சிறிமோகனன் கவலை வெளியிட்டுள்ளார். ஊர்காவற்துறை வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கதிரியக்கப் பிரிவு ஆரம்ப... Read more »

நீராடச் சென்ற குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளார்.

அம்பாறை மாவட்டம் பொத்துவில் கொட்டுக்கல் மலைப்பிரதேசத்தில் உள்ள கடலில் நீராடச் சென்ற 29 வயதுடைய முகம்மட் சிபான் என்ற குடும்பஸ்தர் கடல் அலையில் சிக்குண்டு மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை 3.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தனது... Read more »
error: Content is protected !!