மட்டக்களப்பு காத்தான்குடியில் கிருமித் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை.

மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபை பிரிவில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை இன்று நடைபெற்றது. பொலிஸ் திணைக்களத்தால் முழுமையாக தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை நடைபெற்றது. காத்தான்குடி நகரம் மற்றும் கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைப் பகுதி உட்பட... Read more »

புதிய ஆண்டிற்கான பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

புதிய ஆண்டிற்கான கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் சுபநேரத்தில் சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் அமைச்சின் செயலாளர்; திருமதி.இந்து ரத்நாயக்கா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர், தேசியக் கொடி மற்றும் மங்கள... Read more »

கொட்டகலையில் விபத்து: மாணவி காயம்

நுவரெலியா மாவட்டம் கொட்டகலையில் வெள்ளைக் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது முச்சக்கரவண்டி மோதியத்தில் காயமடைந்த, மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள வெள்ளைக்கடவையில் நேற்று மாலை... Read more »

அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு!

2021ஆம் ஆண்டை வரவேற்று கடமைகளை பொறுப்பேற்கும் சத்தியப் பிரமாண நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல்... Read more »

மன்னாரில் கொரோனா விழிப்புணர்வு!

மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடைமுறை தொடர்பான விழிப்புணர்வு நேற்று நடைபெற்றது. மன்னார் சுகாதாரத் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிலையம் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்விற்கு மன்னார் ஒஸ்ரியா நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது. சர்வமத தலைவர்களின் ஆசியுரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி, கொரோனா... Read more »

விரைவில் மாபெரும் கூட்டணி : மனோ கணேசன்

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான மாபெரும் கூட்டணி ஒன்று குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற... Read more »

கொரோனா 2ஆவது அலை: உக்ரைன் பிரஜைகளே காரணம்!

உக்ரைன் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தினமும் சுமார் 200 பேர் இறந்து வருவதாகவும், இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்பட உக்ரைன் பிரஜைகளே காரணம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சுற்றுலா துறையை... Read more »

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்

இம்மாதம் முதல் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான புதிய வரையறைகளை நிரணயித்து வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று ராஜகிரியவில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது இதன் போது இந்த தீர்மானம்... Read more »

மண்ணில் புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு.

பிறந்த உடனேயே மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. யாழ். அரியாலை புங்கன்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவர் மாதவிடாய் கால இரத்தப் போக்கு கட்டுப்படாதிருப்பதாக கூறி... Read more »

அதிகாரப் பகிர்வு விடயத்தில் நம்பிக்கை : மைத்திரிபால சிறிசேன

மாகாண சபை முறைமையை நீக்குவது என்பது நெருப்போடு விளையாடுவதற்கு சமமானது என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்பொழுது அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் மாகாண சபை முறைமையை முற்றாக நீக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்து வருகின்றனர்.... Read more »
error: Content is protected !!