ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட அமைச்சுக்கள்!

நவம்பர் 20 ம் திகதி அமைச்சு விடயத்துறைகளில் ஏற்படுத்தப்பட்ட திருத்தத்திற்கு ஏற்ப பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவும், அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள்,... Read more »

ஷானி அபேசேகரவின், பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்து!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின், உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய, போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனியவுக்கு, மனித உரிமைகள் ஆணைக்குழு, விஷேட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.... Read more »

கொரோனா:இன்று மாலை 342 பேர் அடையாளம்!

நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரித்துள்ளது. இன்று மாலை, மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான 342 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம், இன்று மாலை 6.20 மணிக்குப் பின்னர் வெளியிட்டுள்ளது.... Read more »

பெண்களுக்கான சுகாதார பாதுகாப்பை, அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் : றோஹினி

பெண்களுக்கான சுகாதார பாதுகாப்பை, அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் றோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். பெண்களுக்கான சுகாதார துவாய்களுக்கான வரியை நீக்க வேண்டும் என்று,... Read more »

கடும் மழை மற்றும் காற்று: யாழில் ஆயிரத்து 424 குடும்பங்கள் பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில், கடும் மழை மற்றும் காற்றின் தாக்கத்தினால், யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில், ஆயிரத்து 424 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். இன்று, சீரற்ற காலநிலை பாதிப்புக்கள் தொடர்பில்,... Read more »

உயர் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் மாற்றம்!

உயர் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம், பொலிஸ் விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சின் அதாவது, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அதிகாரமளித்து, அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் முதல், அதற்கு மேற்பட்ட பதவிகளை உடையவர்களின்... Read more »

யாழில் வெள்ளத்தில் மூழ்கிய பதிவாளர் நாயகம் திணைக்களம்!

யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கும் பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலகம் நேற்று இரவு பெய்த கடும் மழையை அடுத்து வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனையடுத்து வெள்ளம் புகுந்த நான்கு மாடிகளைக் கொண்ட குறித்த அலுவலகத்தை, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க... Read more »

கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி திடீரென மரணம்

கொழும்பு கொள்ளுபிட்டி பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது அவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 42 வயதுடைய இவரது சடலம் தேசிய... Read more »

பட்ஜெட் 2021: 4ஆம் நாள் குழுநிலை விவாதம்

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களால் அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களிடம் முன்வைக்கப்பட்ட வாய்மூல கேள்விகளுக்கான பதில்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. இதேவேளை விவசாயம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்களுக்கான... Read more »

நாட்டில் கோப் குழு ஒன்லைனில் கூடவுள்ளது.

நாட்டில் முதற்தடவையாக கோப் குழு ஒன்லைன் முறையில் இன்று கூடவுள்ளது. களனி கங்கை நீர் மாசடைவது குறித்து உரையாடுவதற்காக அதிகாரிகளை இணையத்தின் ஊடாக தொடர்புபடுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார். கொரோனா நெருக்கடி காரணமாக சுகாதார பாதுகாப்பு... Read more »
error: Content is protected !!