மாவீரர் தினத்தை வீட்டில் இருந்தே அனுஷ்டிக்கவும் – தமிழ் கட்சிகள்!

அரசாங்கத்தினால் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவீரர் நாள் நிகழ்வுகளை, தமிழ் மக்கள், தமது இல்லங்களில் இருந்தவாறு முன்னெடுக்க வேண்டும் என, தமிழ்க் கட்சிகள் சார்பில், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேட்டுக்கொண்டுள்ளார். மாவீரர் நினைவஞ்சலி தொடர்பாக, 8 தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி,... Read more »

யாழில் 7 பேருக்கு கொரோனா:சத்தியமூர்த்தி!

கிளிநொச்சி மாவட்டத்தில், 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன், யாழ்ப்பாணம் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 7 பேருக்கும், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில், இன்று 71... Read more »

நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது : மஹிந்தானந்த

அடுத்து வரும் 5 மாதங்களுக்கு தேவையான, பேதியளவு அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது என, கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த... Read more »

முல்லைத்தீவு கடல் கடும் கொந்தளிப்பு – மீனவர்கள் பாதிப்பு.

வங்கக்கடலில் உருவான நிவர் புயலின் தாக்கம் காரணமாக, முல்லைத்தீவு கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதன் காரணமாக கடற்றொழில் நான்கு நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டம் மப்பும் மந்தாரமாக காணப்படுவதோடு, கடற்கொந்தளிப்பு, குளிரான காலநிலை நிலவுவதனால் மீனவர்கள் எவரும் கடலுக்குசெல்லாது படகுகளை... Read more »

அங்குணுகொலபெலஸ்ஸவில் கைதிகள தொடர் போராட்டம்

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகள் சிலர் கூரை மீதேறி நேற்று முன்தினம் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கிறது. கைதிகள் சிலரை தனிமைப்படுத்துவதற்காக குறித்த சிறைச்சாலைக்கு அழைத்து வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக சிறைச்சாலையினை சுற்றி விசேட... Read more »

கொழும்பில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில்!

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டதன் பின்னர், கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 12, ஆயிரத்து 248 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கொழும்பு மாவட்ட செயலகத்திற்கு 2 பில்லியனுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். அரசாங்க... Read more »

பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மஞ்சளுடன் புத்தளத்தில் இருவர் கைது!

பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகை மஞ்சளுடன், புத்தளத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரையும், புத்தளம் வலய குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்தே குறித்த கைது நடவடிக்கை... Read more »

டயகம – நட்பொன் தோட்டத்தில் ஒருவருக்கு கொரோனா!

நுவரெலியா மாவட்டம் டயகம – நட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு மெனிங் சந்தையில் தொழில்புரிந்துவந்த 72 வயதுடைய குறித்த நபர், கடந்த 22 ஆம் திகதி நெட்பொன் தோட்டத்துக்கு வருகைதந்துள்ளார்.... Read more »

கண்டி நில அதிர்வு: ஆய்வறிக்கை சுற்றாடல் அமைச்சரிடம் கையளிப்பு

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த 18 ஆம் திகதி உணரப்பட்ட நில அதிர்வு தொடர்பான நிபுணர்களின் ஆய்வறிக்கை, சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. கண்டி, அளுத்வத்தை, அம்பாங்கோட்டை, திகன, மயிலப்பிட்டி, அனுரவத்தை, ஹரவத்தை முதலான பிரதேசங்களில் இந்த நில... Read more »

மாவீரர் தின நினைவேந்தலைத் தடை செய்யும் வழக்கு இன்று விசாரணைக்கு

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்யக்கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தொடுக்கப்பட்ட வழக்கு, இன்று காலை 11 மணிக்கு மீள விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சட்டமா அதிபரின் பிரதிநிதியொருவர் மன்றில் முன்னிலையாகுவதற்கு பொலிஸாரால் மன்றில் விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில், வழக்கினை யாழ்.நீதிமன்ற நீதிபதி இன்று... Read more »
error: Content is protected !!