
கிளிநொச்சி மாவட்டத்தில், 72 வயதுடைய வயோதிபர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘கிளிநொச்சி 55 ஆம் கட்டையில் உள்ள, ஒயில் கடை நடத்தும் வியாபாரி ஒருவர், நேற்று காய்ச்சல் என, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில்,... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட ஐவரில் இருவர் சிகிச்சை முடித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியில் உள்ள, வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம், இன்று, இரண்டாவது தடவையும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திர கட்சி 4 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான... Read more »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன், சிதம்பரநாதன் இளங்குன்றனின் மரணத்தில், மிகுந்த சந்தேகம் இருப்பதனால், அது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, தமக்கான நீதியை பெற்றுத்தருமாறு, அவருடைய சகோதரன், ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி ஆகியோருக்கு, கடிதம் அனுப்பி... Read more »

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் அமைந்துள்ள தற்போதைய அரசாங்கம், நிச்சயம் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் என, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று, கடற்தொழில் அமைச்சினால், ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நான்... Read more »

முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடைக் கட்டளையை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி, நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் கட்டளை, எதிர்வரும் 25 ம் திகதி வழங்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, கடந்த 20 ஆம் திகதி அன்று, மாவீரர் தினம்... Read more »

மாவீரர் தின நினைவேந்தலினை தடை செய்யக்கோரி, பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை மற்றும் நெல்லியடிப் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மன்றில் தோன்றிய... Read more »

கொவிட்-19 தொற்று காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாது தமிழகத்தில் சிக்கியிருபோரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்துள்ளார். நாட்டிற்கு வருவதற்கு விரும்புகின்றவர்கள் தொடர்பான விபரங்களை அறியத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு தேவைகள் நிமித்தம், இந்தியாவிற்கு சென்றிருந்த... Read more »

கொழும்பு மாவட்டத்தில் வனாத்துமுல்லை கிராம சேவகர் பிரிவைத் தவிர்ந்த பொரளை பகுதி, வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்டை, வாக்கந்தையைத் தவிர்ந்த கொம்பனித்தெரு பகுதி என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று... Read more »

கொழும்பு மாவட்டம் அவிசாவளை வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆரம்ப சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் வைத்தியர் கழுஹக்கல – ஏகல பகுதியில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »