வாதுவ மற்றும் களுத்துறை பகுதிகளில் நாளை நீர்விநியோகத் தடை அமுல்

மின்சார சபையின் அத்தியாவசியத் திருத்தப் பணிகள் காரணமாக, வாதுவ மற்றும் களுத்துறை பகுதிகளில் நாளை நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை முற்பகல் 8.30 முதல் பிற்பகல் 7.30 வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

சுவிட்சர்லாந்தில் சிறார்கள் மீது துன்புறுத்தல் அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தில் குடும்ப வன்முறை அதிகரித்தது என ஆய்வொன்றில் தெரியவந்துள்ள நிலையில், தற்போது சிறார்கள் மீதான துன்புறுத்தல்கள் ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னர் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லூசெர்ன் பல்கலைக்கழகத்தினர் மேற்கொண்ட ஆய்வில் சிறார்கள் மீதான துன்புறுத்தல் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது.... Read more »

அமெரிக்கத் தேர்தல்: ஜோ பைடனின் வெற்றியை ஏற்றுக்கொண்டார் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளதாக ட்ரம்ப் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளுடன் வெற்றி பெற்ற அதேவேளை குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் ட்ரம்ப் 232... Read more »

இளைஞர்களுக்கு வணிகக் கடன் – நாமல்

சிறு தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ள இளைஞர்களுக்கு அரச வங்கிகள் மூலம் குறைந்த வட்டியுடன் வணிகக் கடன்களைப் பெற்றுக்கொடுக்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகின்றார். இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்ட இளைஞர்... Read more »

வவுனியாவில் ஐயப்ப சாமிகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று

வவுனியாவில் ஐயப்ப விரதத்தினை நோற்கும் சாமிகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்துக்களால் முன்னெடுக்கப்படும் சபரிமலை சுவாமி ஐயப்பன் விரத பூஜை வழிபாடுகள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயம் மற்றும் உக்குளாங்குளம் ரகுபாக்கத்திலும் ஐயப்பன் சுவாமிகளுக்கு மாலை அணிவித்து... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை: யாழ். இந்துவில் 144 மாணவர்கள் சித்தி

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ச.ஆர்வலன், வெளிவந்துள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில்; 195 புள்ளிகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். 195 புள்ளிகளைப் பெற்றுச் சாதனை படைத்தமை தொடர்பில் மாணவனிடம், வினவியபோது, இடர்மிகுந்த காலத்தில் தனது கற்றல் செயற்பாடுகளுக்கு உதவியவர்களுக்கு... Read more »

வழமைக்குத் திரும்பும் கொழும்புத் துறைமுகப் பணிகள்: துறைமுக அதிகார சபைத் தலைவர்!

கொழும்புத் துறைமுகத்தில் இந்த வாரத்திற்குள் வழமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயாரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், ‘இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் கடல் சார்ந்த கேந்திரத்துடன்... Read more »

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அபாயமானவை!

கொழும்பில் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் அபாயமுடையவை என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பிரதேசங்களில் இனங்காணப்படாத தொற்றாளர்கள் இருக்கக் கூடும் என்பதன் காரணமாகவே அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என அந்தப் பிரிவின் பிரதானி விசேட... Read more »

கொரோனா – கொழும்பில் 541 பேருக்கு தொற்று!

நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 704 கொரோனா தொற்றாளர்களில் 541 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இனங்காணப்பட்ட அனைவரும் பேலியகொட, திவுலப்பிட்டிய நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், இதற்கமைய திவுலபிட்டிய, பேலியகொடை ஆகிய இரண்டு... Read more »

அறிக்கை – அரச தகவல் திணைக்களம் தெரிவிப்பு

கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணம் அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் மாவட்ட செயலகங்களின் ஊடாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 முதலாவது அலை ஏற்பட்ட கடந்த மார்ச்... Read more »
error: Content is protected !!