கொரோனா அச்சம்: வெளிநாட்டில் சிக்கியிருந்த மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 128 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த இலங்கையர்களும், இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரங்களில் பணிபுரியும் அதிகாரிகளுமே இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். நேற்று மாலை சீனாவின் ஷங்காய் விமான நிலையத்தில்... Read more »

முடக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவையை முன்னெடுக்க அனுமதி

கொரோனா வைரஸ் பரவலையடுத்து முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, முடக்க நிலையில் உள்ள மருதானை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு ஆகிய பகுதிகளில், நாளை அதிகாலை 5.00 மணி தொடக்கம், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி... Read more »

கொரோனா: பொதுமக்கள் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்படுங்கள்- யாழ் அரச அதிபர்

யாழ் மாவட்டத்தில் தற்போது 600 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாகத் தொடர்புபட்ட மற்றும் தொற்றுக்குள்ளானவர்களுடன் பயணித்த சுமார் 600 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைக்குரிய மாதாந்த பரிசோதனைகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைக்குரிய மாதாந்த பரிசோதனைகள் நாளை முதல் விக்ரோரியா வீதியில் அமைந்துள்ள சிகிச்சை நிலையத்தில் நடைபெறவுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். மகப்போற்று பெண் நோயியில் சிகிச்சைப் பிரிவு மீண்டும் பழைய இடத்திற்கு... Read more »

கடற்கரையோரங்களில் கண்டல் தாவரங்கள் நாட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனைப்பகுதியில் கடல் சார் வளங்களை பாதுகாக்கும் வகையில், கடற்கரையோர பகுதியில் கண்டல் தாவரங்களை நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட கடற்கரையோர பகுதியில் முதல் கட்டமாக 400 கண்டல் தாவரங்கள் நாட்டி வைக்கப்பட்டன. கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார... Read more »

நல்லூரில் விசேட வழிபாடு: பக்தர்களுக்கு அனுமதியில்லை

கந்தசஸ்டி விரதம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடாத்தப்பட்டுள்ளன. நாட்டில் தற்போதுள்ள கொரோனா அச்ச நிலைமையின் காரணமாக ஆலயங்களில் வழிபாடாற்றுவதற்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விதிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப, வரலாற்று பிரசித்தி பெற்ற... Read more »

புதிய அரசியலமைப்புக்கான மக்கள் முன்மொழிவு! – காலம் நீடிப்பு

புதிய அரசியலமைப்புக்கான பொதுமக்கள் முன்மொழிவுக்காக கால எல்லையை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். புதிய அரசியலமைப்பினை வரைவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் 09 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவொன்று அமைச்சரவையால்... Read more »

துயிலுமில்லத்தில் சிரமதானம்: பொலிஸார் கேள்வி!

யாழ்ப்பாணம் – கோப்பாய் துயிலுமில்லத்துக்கு முன்பாக உள்ள காணியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முன்னெடுத்த சிரமதானப் பணியின்போது பொலிஸாருக்கும், சிரமதானப் பணியில் ஈடுபட்டவர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை தமிழ்த்; தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின்... Read more »

வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு மக்களுக்கு முகக்கவசங்கள், தொற்று நீக்கும் திரவங்கள் வழங்கல்

யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர், கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் தொற்று நீக்கும் திரவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வடமராட்சி கிழக்கு பிரதேச லயன்ஸ் கழக ஏற்பாட்டில் வடமராட்சி, நெல்லியடி லயன்ஸ் கழகத்தினர் பளை பொலிசார்,... Read more »

ட்ரம்பை ஆதரித்து வெள்ளை மாளிகை முன்பாக போராட்டம்!

ட்ரம்ப் ஆட்சி வேண்டும் என வலியுறத்தி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்சியிலுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் படுதோல்வியடைந்தார். தோல்வியை ஏற்காத ட்ரம்ப் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய... Read more »
error: Content is protected !!