நாட்டில், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட இருவர், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை உயிரிழந்துள்ளனர். 54 மற்றும் 45 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர் என, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில், முன்னேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று... Read more »

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களை, ட்ரோன் கமெராக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில், பொது மக்களின் நகர்வைக் கண்காணிக்க, ட்ரோன் கமெராக்களைப் பயன்படுத்தும் சிறப்பு நடவடிக்கை, இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப் படையின் உயர் தொழில்நுட்ப ட்ரோன் கமெராக்கள், கொழும்பு மற்றும் கம்பஹாவில் பயன்படுத்தப்படும் என, அரசாங்கம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் பகுதிகளில், கட்டுப்பாடுகள் நீக்கப்படும்... Read more »

கொரோனா – மொத்த எண்ணிக்கை 15,350 ஆக உயர்வு

நாட்டில் மேலும் 635 கொரோனா தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 15,350 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 625 பேர்; பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். 10 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்களாவர். பேலியகொடை... Read more »

தாதுகோபுரத்தை புனரமைக்கும் பணி ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள தீகவாவி புனித பூமியிலுள்ள தாதுகோபுரத்தை புனரமைக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். முதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர், அதனைத் தொடர்ந்து பிரித் பாராயணத்திற்கு மத்தியில் தாதுகோபுர புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு... Read more »

மதச் சிறுபான்மையினரின் உரிமைகளை அரசு மதிக்கவேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை முன்னெடுக்கும்போது மதச் சிறுபான்மையினரின் உரிமைகளை அரசு மதிக்கவேண்டும் எனச் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள... Read more »

முஸ்லிம் இனவாதிகளிடம் அரசு சிக்கியுள்ளது : பஞ்சலோக தேரர்

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த இந்த அரசும் இன்று சிங்கள மக்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்துகிறது. இந்தச் செயலை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என சிங்களே அமைப்பின் செயலாளர் பஞ்சலோக தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

போதைப்பொருள் கடத்த முயற்சித்த 20 வயதுடைய இளைஞன் கைது

கஞ்சா போதைப்பொருளை கடத்த முயற்சித்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் காங்கேசன்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ 335 கிராம் கஞ்சா போதைப்பொருள், ஒரு தொகை பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார்... Read more »

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில 03 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்;குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 41 வயதுடைய மாரிமுத்து சுதாகரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை வயலில் வரம்பு... Read more »

வீடமைப்புத் திட்டங்களை ஆரம்பிக்கவும் : ஜனாதிபதி

நாட்டின் பல பிரதேசங்களை உள்ளடக்கியதாக குறைந்த, மத்தியதர மற்றும் உயர் மத்திய வருமானம் பெறுவோருக்காக பல வீடமைப்பு திட்டங்களை ஆரம்பிக்குமாறு நிர்மாணத் துறை முன்னோடிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய தொழிநுட்பம் மற்றும் முறைமைகளை பயன்படுத்தி ஆக்கத்திறனுடனும் சுற்றாடலை பாதுகாக்கும் வகையிலும் நிர்மாணப்... Read more »

முல்லை. பனிக்கன்குளம் பகுதியில் விபத்து!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் 232 ஆவது கிலோமீற்றருக்கும் 233 ஆவது கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா நோக்கி பெக்கோ இயந்திரத்தை ஏற்றி வந்த வாகனம் ஒன்று வாகனத்தினுடைய சக்கரம் காற்று... Read more »
error: Content is protected !!