கொரோனாத் தொற்றாளருக்கு டெங்கு!

நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் நப​ரொருவர், டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 29 வயதுடைய இளைஞர் ஒருவருக்கே இவ்வாறு டெங்குக் காய்ச்சலும், கொரோனா தொற்றும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் டெங்கு விசேட சிகிச்சை மத்திய நிலையத்தின்... Read more »

வவுனியா செட்டிக்குளத்தில் வியாபார நிலையத்தில் தீப் பற்றல்!

வவுனியா செட்டிக்குளத்தில் ஹாட்வெயார் வியாபார நிலையத்தில் ஏற்பட்ட தீயினால், பல இலட்சம் ரூபா பெறுதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. செட்டிக்குளம் வீதியால் சென்று கொண்டிருந்த சிலர், கடையின் கூரையின் மேலாக புகை வருவதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அருகிலுள்ளவர்களுடன் இணைந்து, தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன், தீ... Read more »

ஹட்டனில் விசேட தொழுகை

கொரோனாத் தொற்றிலிருந்து நாட்டை மீட்க வேண்டி, அனைத்து மத வழிபாட்டிடங்களிலும் வழிபாடுகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த பணிப்புரைக்கமைவாக, நுவரெலியா மாவட்டம் ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசலில் நேற்று மாலை விசேட தொழுகை இடம்பெற்றது. ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாக குழு தலைவர் ஏ.ஜே.எம்.பசீரின்... Read more »

உண்ணிக் காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை – வைத்தியர் சி.யமுனாநந்தா

மக்கள் உண்ணிக் காய்ச்சால் தொடர்பில் அவதானமாக செயற்படவேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா எச்சரித்துள்ளார். தற்பொழுது பரவிவரும் உண்ணி காய்ச்சல் நோய் தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் சி.யமுனாநந்தா, பருவகாலங்கள் ஆரம்பிக்கும்போது உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகம் எனவும்... Read more »

பாடசாலைகளை மீளத் திறக்க சாத்தியம்!

நாடளாவிய ரீதியில் கொரோனாத் தொற்று அச்சத்தால் மூடப்பட்ட பாடசாலைகளை எதிர்வரும் 23ஆம் திகதி மீளத் திறப்பதற்கான சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைத்துப் பாடசாலைகளும் கிருமித் தொற்றுநீக்கம் செய்யப்பட்ட பின்னரே திறக்கப்படவுள்ளதுடன், அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அழைக்காமல் இரண்டு கட்டங்களாக வகுப்புக்களை நடத்திச் செல்வது குறித்தும்... Read more »

மன்னாரில் கிராம அலுவலகர் படுகொலை – சந்தேக நபர் கைது!

மன்னார் மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், பெண் கிராம அலுவலகர் ஒருவரின் கணவரை இலுப்பைக்கடவை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் எஸ்.விஜியேந்திரன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கொலை... Read more »

யாழ் – துரையப்பா விளையாட்டரங்கை சர்வதேச தரத்திற்கு மாற்ற நடவடிக்கை – நாமல் ராஜபக்ச

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில், சர்வதேச தரம் மிக்க ஒடுபாதைகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, இன்றையதினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை பார்வையிட்டார். யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் சமூக உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குழுக்... Read more »

யாழ்.சங்கானையில் ஐம்பொன் சிலைகள் மீட்பு!

யாழ்ப்பாண மாவட்டம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மாலை 4 மணியளவில் குறித்த இடத்திற்கு சென்ற இராணுவத்தினர், குளத்துக்குள்ளிலிருந்து சிலைகளை மீட்டெடுத்தனர்.... Read more »

மட்டக்களப்பில் மேலும் 6 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி!

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தியில் மேலும் 6 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை தொடர்பான அறிவிப்பை கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆழகையா லதாகரன் விடுத்துள்ளார். இதனையடுத்து மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளிகளின் எண்ணிக்கை 67ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை கிழக்கு மாகாணத்தில் இதுவரை... Read more »

மேல் மாகாண மின் பாவனையாளர்களுக்கு விசேட சலுகை!

மேல்மாகாண மின் பாவனையாளர்கள் மாத மின் கட்டணத்தை செலுத்த தாமதம் ஏற்பட்டாலும் மின் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது என மின்சார சபை அறிவித்துள்ளது. கடந்த மாதம் மேல்மாகாணத்திற்கு ஊரடங்கு சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மேல்மாகாணத்தில் உள்ள மின்பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மாத... Read more »
error: Content is protected !!