மன்னாரில், வீட்டுத் தோட்ட செயற்திட்டம் இன்று ஆரம்பம்!

ஜனாதிபதியின் சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ், மனைப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மன்னாரில், வீட்டுத் தோட்ட செயற்திட்டம், வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தலைமையில், தாழ்வுபாடு கிராம சேவகர் அலுவலகத்தில், நிகழ்வு நடைபெற்றது. முதல்... Read more »

யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு, தளபாடங்கள் அன்பளிப்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு, நோயாளர் நலன்புரிச் சங்கத்தால், தளபாடங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆதார வைத்தியசாலைக்கு, புதிய வைத்திய உத்தியோகத்தர்கள், வெளி மாவட்டத்தில் இருந்து கடமைகளுக்காக வரவிருக்கும் நிலையில், அவர்களுக்குரிய விடுதி வசதிகள் இன்மையால், அதற்கான ஏற்பாட்டை உடனடியாக மேற்கொள்வதற்கு, வடக்கு மாகாண சுகாதார... Read more »

விவசாய ஆராய்ச்சி நிலைய திறப்பு விழா ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில், எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற இருந்த, விவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைக்கப்ப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் முதலாம் திகதி வரை, மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு... Read more »

தீமையிலும் நன்மையடைவதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும் – டக்ளஸ்!

தற்போதைய நிலையை எதிர்கொள்ள தேவையான, சகல விதமான மாற்று ஏற்பாடுகளையும் வழங்க, கடற்றொழில் அமைச்சு தயாராக இருப்பதாக, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று, கொவிட்-19 காரணமாக, வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்குடன், கிளிநொச்சி மாவட்ட... Read more »

யாழ். குருநகர் பகுதியில் 38 பேருக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை!

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில், இன்று 38 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம், குருநகர் பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, தொற்றுக்குள்ளானவர்களுடன், நேரடியாக தொடர்புகளை பேணியவர்களுக்கு, இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்றுக்குள்ளானோர் கடமையாற்றும்... Read more »

நாட்டின் சுயாதீனத்தன்மையை, விட்டுக்கொடுக்க தயாரில்லை : கோட்டாபய!

பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்வதற்கு, இலங்கையுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயற்பட தயார் என, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தலைமையிலான உயர் மட்ட தூதுக்குழு, இன்று முற்பகல், ஜனாதிபதி... Read more »

சமூக இடைவெளி, கட்டாயம் பேணப்படல் வேண்டும் : சி.யமுனாநந்தா

சமூக இடைவெளி பேணல் என்பது, கொரோனா சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற் பாதுகாப்பு நடவடிக்கை எனவும், அதனை ஐந்து நிலைகளில் நோக்க வேண்டும் எனவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் டாக்டர் சி.யமுனாநந்தா வலியுறுத்தியுள்ளார். இன்று, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், இந்த... Read more »

எச்சரிக்கை : நாட்டில் கட்டுமீறிச் செல்கின்றது கொரோனா

நாட்டில் எதிர்பார்த்ததை விடவும் கொவிட் தொற்றில் நிலைமை தீவிரமடைந்துள்ளதென சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   ‘உலகம் பூராகவும் பரவியுள்ள கொவிட் வைரஸ் தொற்றின் இரண்டாம் கட்ட பரவல் இலங்கையிலும்... Read more »

மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்த நடவடிக்கை

நாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கள் கிழமை அதிகாலை 5 மணி வரை அமுலாகும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். தற்பொழுது மேல்மாகாணத்தில் சில இடங்களில் காணப்படும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 02 ஆம்... Read more »

பாணந்துறை, மொரட்டுவ, ஹோமாகம மக்கள் ரயில்களில் பயணிக்கத் தடை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பாணந்துறை, மொரட்டுவ, ஹோமாகம பகுதியில் உள்ளவர்கள், மறு அறிவித்தல் கிடைக்கும் வரை, களனிவெளி மற்றும் கடலோரப் பாதைகளில் இயங்கும் ரயில்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பாணந்துறை, ஹோமாகம, ஹோமாகம வைத்தியசாலை... Read more »
error: Content is protected !!