ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட செய்தி

கோட்டை,புறக்கோட்டை,வெலிகடை மற்றும் பொரளை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளுக்கு இன்று மாலை 06 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read more »

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம் அமுல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக, அப்பகுதி வெறிச்சோடியுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி வெளியில் நடமாடுவோர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கு உட்படுத்தப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட... Read more »

கோப்பாய் தனிமைப்படுத்தல் மையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து ஒருவர் தப்பிக்க முயற்சித்த நிலையில், பொதுமக்களின் உதவியுடன்... Read more »

வடமாகாண கொரோனா ஒழிப்பு செயலணி அவசரமாகக் கூடுகிறது

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் வடக்கு மாகாணத்திலும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இந் நிலையில் வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் நாளை காலை வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கூட்டத்தில் வடக்கு மாகாணத்தைச்... Read more »

பாதுகாப்பான புகையிரத கடவையை கோரும் முல்லைத்தீவு பனிக்கன்குள மக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் புகையிரத வீதியின் 302 ஆவது கிலோமீற்றர் பகுதியில் புகையிரத கடவை ஒன்றினை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பான புகையிரத கடவை இல்லாததன் விளைவாக, புகையிரத பாதைக்கு குறுக்கான... Read more »

ஹட்டனில் மீன் வியாபாரிக்கு கொரோனா!

நுவரெலியா ஹட்டன் நகரிலுள்ள மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதர பரிசோதகர் தெரிவித்துள்ளார். பேலியகொடை மீன் சந்தையில் மீன் கொள்வனவு செய்து விற்பனை செய்பவர்கள் என அடையாளம் காணப்பட்ட மீன் விற்பனை நிலையங்கள்... Read more »

கவனயீனமாக உள்ளதா யாழ்.போதனா வைத்தியசாலை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் கொழும்பு கம்பகா மேல் மாகாணத்தை சொந்த இடமாகக் கொண்ட தாதியர்கள் வைத்தியர்கள் விடுமுறைக்காக தமது சொந்த இடங்களுக்கு சென்று வருகின்ற போதிலும் அவர்களை தனிமைப்படுத்துவது இல்லை என குற்றஞ்சாட்டப்படுகின்றது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட இடங்களுக்கும் தமது தொழில் நிமித்தம்... Read more »

ஊர்காவற்துறை சுகாதார பணிமனையின் அறிவுறுத்தல்!

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுக்கு மேல் மாகாணத்திலிருந்து வருவோர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப் படுவார்கள் என ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளது. கம்பஹா கொழும்பு மாவட்டங்களில் இருந்து வருவோர் உட்பட மேல் மாகாணத்திலிருந்து வருவோர் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள்... Read more »

அனலைதீவில் 30பேர் சுயதனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் அனலைதீவில், இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டவர்களுடன் தொடர்புபட்ட 10 குடும்பத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவர் என்ற அடிப்படையில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவுகள் கிடைத்துள்ளது.... Read more »

பொலிஸ் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நடமாட்ட கட்டுப்பாடுகள் குறித்து கண்காணிப்பதற்காக  விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொவிட்19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மதித்து செயற்படவேண்டும் என்றும் அவர்... Read more »
error: Content is protected !!