சிறந்த சந்தையை உருவாக்க ஜனாதிபதி திட்டம்!

விவசாயிகளுக்கு அதிக விலையும், நுகர்வோருக்கு சலுகை விலையும் கிடைக்கும் வகையிலான, சந்தையை உருவாக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார். இன்று பிற்பகல், வாழ்க்கைச் செலவு குழுவுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. நாட்டின்... Read more »

நாட்டில் மேலும் 130 பேருக்கு கொரோனா!

நாட்டில், மேலும் 130 பேர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, 5 ஆயிரத்து 168 ஆக அதிகரித்துள்ளதுடன், ஆயிரத்து 798 பேர், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து, இதுவரை 3... Read more »

2 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தும் வகையிலான நிலையங்கள் நிர்மாணம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள, தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு, 2 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தும் வகையிலான நிலையங்கள், இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மினுவங்கொடை ஆடைத்... Read more »

ஜனாதிபதிக்கு, அதிகாரம் வழங்கப்பட வேண்டும் : டிலான்!

இரண்டு தேர்தல்களிலும், மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளை அளித்த மக்களுக்காக, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தை நீக்குவதே, தற்போதைய நிலைப்பாடு என, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். அடித்தளத்தை... Read more »

ரிஷாட் வழங்கிய நியமனங்கள் தொடர்பில், விசாரணை அவசியம் : ஞானசார தேரர்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் காலப்பகுதியில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு நியமனம் செய்யப்பட்டவர்களை நிறுத்தி, தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட வேண்டும் என, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்,... Read more »

வத்தளையில் 18 பேருக்கு கொரோனா!

கம்பஹா மாவட்டத்தின் வத்தளைப் பிரதேசத்தில், 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வத்தளை, ஹெந்தல, போப்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்களே, இவ்வாறு அடையளம் காணப்பட்டுள்ளனர். இதனால், தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், 85 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ————- அத்துடன், களுத்துறை – மத்துகம... Read more »

சமூகத்தில் இருந்தே கொரோனா தொற்று : மரிக்கார்!

அரசாங்கம், சரியான முறையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாத நிலையில், நாட்டில் தற்பொழுது கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் கொவிட் தொற்றின்... Read more »

சுகாதார நடைமுறைகள் கைவிடப்பட்டமையே, தற்போதைய நிலைமைக்கு காரணம் : நிஹால்

கம்பஹா மினுவாங்கொடை பகுதியில், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையானது, நாட்டில் ஏற்கனவே ஏற்பட்ட, கொரோனா நிலைமையை விட மாற்றமுடையதும் எதிர்பாராததுருமானதாகும் என, தொற்று நோய் ஆய்வக பிரிவின் விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

சேவைகள் இடை நிறுத்தம்! – ஓய்வூதிய திணைக்களம் அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓய்வூதிய திணைக்களத்துக்கு சேவைப் பயணாளர்களின் வருகை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியத்தை செயற்படுத்துவதற்காக நேர்முகப்பரீட்சைக்காக ஓய்வூதியக்காரர்களை அழைத்தல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்காக ஓய்வூதிய திணைக்களத்துக்கு வரும் அனைத்து ஓய்வூதியகாரர்களின் வருகை, மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக... Read more »

கொரோனா – தொற்று எண்ணிக்கை 5038ஆக உயர்வு

நாட்டில் நேற்றையதினம் 194 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மற்றும் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை மினுவங்கொட கொரோனா தொற்று... Read more »
error: Content is protected !!