செயலிழந்துள்ள பீ.சி.ஆர் இயந்திரம்: இலங்கை வரும் சீன வல்லுனர்கள்

நாட்டில் செயலிழந்து காணப்படும் பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரத்தை மீண்டும் செயற்படுத்துவதற்காகச் சீன விசேட வல்லுநர்கள் இன்று இலங்கை வருகைதரவுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து... Read more »

விமானப் படைக்கு புதிய தளபதி

இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை விமானப் படையின் 18ஆவது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரண நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால்... Read more »

நாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக, அமைச்சர் டக்ளஸ்!!

நாடாளுமன்றப் பேரவையின் உறுப்பினராக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு, இன்று பிரதமர் அலுவலகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், 5 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக் குழுக்களின்... Read more »

பிரதமரின், இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமனம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், இந்து சமய விவகாரங்களுக்கு, இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில், இந்து சமய விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகராக, ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான ஆலோசகராக, கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமரின் ஆலோசகர்களாக... Read more »

கொவிட் தகவல் திரட்டும் புதிய செயலி அறிமுகம்!

மருத்துவத்துறையிலும், கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள, அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை இலகுவாக அறிந்து கொள்ளக் கூடிய புதிய செயலி, அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண சுகாதார சேவைகள் அலுவலகத்தினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, செயலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கொவிட் நோய்த்... Read more »

எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் – ஜனாதிபதி சந்திப்பு!

36 வருட சேவையை நிறைவு செய்து, எதிர்வரும் 2 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள, விமானப் படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். இச்சந்திப்பு, ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 2019 மே மாதம் 29 ஆம் திகதி,... Read more »

மூன்று கட்டங்களாக சுய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நடவடிக்கை!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான தேசிய நிலையம், மூன்று சுய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை அடையாளப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில், தொற்றாளருடன் தொடர்புடையவர்கள், அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். அவர்களின் தனிமைப்படுத்தல், பல்வேறு கட்டங்களில் கண்காணிக்கப்படும். காலை 6.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி... Read more »

இன்று நாட்டில் 414 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

நாட்டில், மேலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 414 பேர், இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனால், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, 9 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று இரவு 7.10 மணிக்கு, அறிக்கை வெளியிட்டுள்ளனது. அதனடிப்படையில், தற்பொழுது... Read more »

மேலுமொரு கொத்தணி உருவானால் நாடு மோசமான நிலையை அடையும்:ஹரித!

பேலியகொடை கொரோனா கொத்தணியை விட, பாரியளவான கொத்தணி உருவானால், உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும் என, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். தற்போதைய... Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு... Read more »
error: Content is protected !!