ரிஸாட் பதியூதீனிடம், பல மணி நேரம் விசாரணை!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஸாட் பதியூதீன் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோரிடம், உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, இன்று விசாரணைகளை நடத்தியுள்ளது. அவர்கள் இருவரிடமும், பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ள... Read more »

ஐ.தே.க வின்புதிய பிரதித் தலைவராக, ருவான் விஜயவர்தன தெரிவு!

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பிரதித் தலைவராக ருவான் விஜயவர்தன, இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதித் தலைவர் பதவிக்கு, ருவான் விஜயவர்தன, கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதன் பின்னர், ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு... Read more »

20ஆவது திருத்தச்சட்டத்தை நான் தயாரிக்கப்படவில்லை : அலி சப்ரி!

தற்போது கொண்டுவரப்படவுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம், பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என, நீதி அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை வெளியிட்டார். கொழும்பில், நேற்று மாலை நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர், இவ்வாறு தகவல் வெளியிட்டார். ‘பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால், 9 பேர் கொண்ட... Read more »

யாழ். கலாசார மத்திய நிலையத்தை, அமைச்சர் இந்திக்க பார்வையிட்டார்!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில், யாழ்ப்பாண நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கலாசார மத்திய நிலையத்தை, கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த பார்வையிட்டுள்ளார். இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் இணைந்திருந்தார். கட்டுமானங்கள் நடைபெற்று... Read more »

இரண்டு கோரிக்கைகளை மனோ கணேசன் மீண்டும் வலியுறுத்தல்!

அரசியலமைப்பு குழுவில், மலையக பிரதிநிதி இடம்பெறுவது தொடர்பிலும், நஷ்டமடையும் தோட்டங்கள், சிறுதோட்டங்களாக மறுசீரமைப்பு செய்யப்படுவது தொடர்பாகவும், நாம் எழுப்பியுள்ள கோரிக்கைகளுக்கு, அரசாங்கமும், அரசுடன் இருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பதில் கூற வேண்டும் என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ... Read more »

20 ஆம் திருத்தத்தால் அரசில் பிரச்சினை – அத்தநாயக்க!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் காரணமாக, அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டு, கருத்து மோதல்கள் வலுப்பெற்றுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். 20வது... Read more »

மஹிந்த மாமா எங்களுக்கு வீடு இல்லையா? இந்திக்க அனுருத்த யாழ் விஜயம்!

தமக்கான வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு கேரி, நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொம்மைவெளி வசந்தபுரம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.... Read more »

மாகாண சபைகள் அவசியம் – சரத் வீரசேகர!

மாகாண சபை மூலம், நாட்டு மக்களுக்கு பெரும்பாலும் நன்மை கிடைக்கப் பெறுமாயின், மாகாண சபை காணப்பட வேண்டும் என, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இராஜாங்க அமைச்சில், மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், மாகாண... Read more »

ஹட்டனில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை!

நுவரெலியா ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகில் காணப்படும், பாதுகாப்பற்ற புகையிரத கடவையால், ரயிலில் மோதுண்டு உயிர் தேசங்கள் ஏற்படும் அபாயமிருப்பதாக சுட்டிக்காட்டும் பாடசாலை மாணவர்களும், பொது மக்களும், சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். ஹட்டன் புகையிரத நிலையத்தில்... Read more »

லக்ஷ்மன் கிரியெல்லவின் புதல்விக்கு எதிராக வழக்குத் தாக்கல்

மத்திய சுற்றாடல் அதிகார சபை, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் புதல்வி ஷமி கிரியெல்ல ஹேரத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. ஹந்தானை பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் உள்ள காணி ஒன்றில் காடுகளை அழித்து தரை மட்டமாகியதாக... Read more »
error: Content is protected !!