கொரோனா – 309 பேர் வீடு திரும்பினர்!!

கொரோனா தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்தில் 309 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்தின் தியத்தலாவ பிரதேசத்தில் உள்ள நான்கு முகாம்களில் இருந்து 309 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தியத்தலாவ... Read more »

கொரோனா – சிகரொட் விற்பனையை தடை செய்ய கோரிக்கை!!

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு சிகரெட் விற்பனையை தடை செய்யுமாறு வைத்திய அதிகாரிகள் மற்றும் கல்வியியலாளர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் இறப்பிற்கும் புகைத்தலுக்கும் இடையில் உள்ள தொடர்பினை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த... Read more »

பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டமை... Read more »

நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. கடுமையான உடல்நலப் பிரச்சினையாக மாறியுள்ள கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது,... Read more »

ஊரடங்கு – அரசின் புதிய கட்டுப்பாடு!!

மறு அறிவித்தில் வரை, அரச மருந்தகங்கள் தவிர அனைத்து மருந்தகங்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு, பதில் பொலிஸ் மா அதிபரினால், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனினும், மருந்தகங்களினால், வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து... Read more »

கொரோனா : மத தலைவர்கள் தலையிடக்கூடாது – மனோ!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சகல மத தலைவர்களும் தலையிடக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகப்புத்தகம் ஊடாக அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நிவாரண நடவடிக்கையில் மருத்துவ விஞ்ஞானத்துக்குப் புறம்பாக மதத் தலைவர்கள் தலையிடக்கூடாது.இது எல்லா... Read more »

அம்பாறை அரசாங்க அதிபர் பாணமை, லாகுகல பிரதேசங்களுக்கு விஜயம்!!

அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாணமை மற்றும் லாகுகல பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சென்ற அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் ஆகியோர் மக்களின் நலன் தொடர்பிலும் அறிந்து கொண்டனர். லாகுகல பிரதேச செயலாளர்... Read more »

இலங்கையை சேர்ந்த இந்தியாவில் கல்வி கற்கும் மாணவர்கள் அரசிடம் முக்கிய வேண்டுகோள்!!

இந்தியாவின் தமிழ்நாட்டில் கல்வியை தொடரும் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கற்றுவரும் விரிவுரையாளர்கள், மாணவர்களே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர். இந்தியாவில் பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தாங்கள் வீடுகளில் தங்கியுள்ளதாக... Read more »

நாடடின் தற்போதைய நிலையை சமாளிக்க எம்மிடம் போதுமான நிதி உள்ளது – திறைசேரி!!

நாட்டின் தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தின் செலவுகளுக்கு போதுமான நிதி கையிருப்பிலுள்ளதாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார். ‘பாதுகாப்பு, சுகாதார சேவை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான நிதியை வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம். அத்தியாவசிய பொருட்களை மக்களின் வீடுகளுக்கு சென்று விநியோகிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.... Read more »

யாhழ் தாவடி சிறுமிக்கு கொNhனா தொற்று இல்லை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 4 வயதுப் பாலகிக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது குருதி மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் எதிர்மறையான அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது என்று யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தாவடியைச் சேர்ந்த 4... Read more »
error: Content is protected !!