மட்டு வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவிற்கு, தானியங்கி தேனீர் இயந்திரம் வழங்கி வைப்பு!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றுநோய்க்கான சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்காக தானியங்கி தேனீர் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனமான அம்கோர் நிறுவனம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் தற்போதைய சேவை நலன் கருதி இதனை வழங்கி... Read more »

மன்னாரில் ‘சிவ தரிசனம்’ மாதாந்த பத்திரிகை வெளியீடு!!

‘சிவ தரிசனம்’ மாதாந்த சைவ செய்திப் பத்திரிகை வெளியீட்டு விழாவும், 2019 ஆம் ஆண்டு, உயர் தர பிரிவுகளில் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், இன்று மன்னாரில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட இந்து சமய வளர்ச்சி சங்கத்தின் அனுசரனையில், மாதாந்த சைவ... Read more »

கொரோனா : வவுனியாவில் யாக பூஜை!!

கொரோனா வைரஸ் தாக்கதத்தில் இருந்து, உலக மக்களை பாதுகாக்க வேண்டி, வவுனியா தோணிக்கல் விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதர் திருக்கோவில், யாக பூஜை நடத்தப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பூஜைகளை, பிரபாகரக் குருக்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். இதன் போது, கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு... Read more »

யாழில், வெங்காயத்தாள் கொதி புழுவின் தாக்கம்!

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், தற்போது வெங்காய செய்கையில், வெங்காயத்தாள் கொதி புழுவின் தாக்கம் இனம்காணப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன் தெரிவித்துள்ளார். இன்று, இது தொடர்பில், மாவட்டத்திலுள்ள வெங்காய செய்கைகள் மேற்கொள்ளப்படும் இடங்களுக்கு, நேரடி கள விஜயத்தை மேற்கொண்ட... Read more »

வத்தளையில், கடலில் நீராடச் சென்ற நபர் சடலமாக மீட்பு!!

கொழும்பு வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வத்தளை எலகந்த கடலில் நீராடச் சென்ற நபர், நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், நேற்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர். உயிரிழந்த நபர், வத்தளை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தொழில்... Read more »

டான் குழுமத்தின் உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணம் ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணம் தீவக பிரதேசத்தில் உதைபந்தாட்டத்தை மேம்படுத்தும் வகையில், டான் குழுமம் நடாத்தும் தீவக உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணம் இன்று ஆரம்பமாகியது. ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் போட்டிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது. தீவகத்தைச் சேர்ந்த 30 உதைபந்தாட்டக் கழகங்கள் இந்த தொடரில் பங்குபற்றவுள்ளன.... Read more »

பொதுமக்கள் சுற்றுலாப் பயணங்களை தவிர்க்கவும்!

பொதுமக்கள் இரண்டு வாரங்களுக்கு யாத்திரை மற்றும் சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டினுள் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு அதனை கட்டுப்படுத்தும் முகமாக பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக... Read more »

கல்முனை, காரைதீவு பகுதிகளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!

அவள் தைரியமானவள் நாட்டுக்கு பலமானவள் என்ற தொனிப்பொருளில் அமைந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி, வலயம் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினம் 2020, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று... Read more »

கொரோனாவிலிருந்து பாதுகாப்பு வேண்டி மட்டு. ஏறாவூரில் பிரார்த்தனை!

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து உலக மக்களுக்கு பாதுகாப்பு வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் நிகழ்வொன்று மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தில் நடைபெற்றது. ஏறாவூர் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில், அதன் தலைவர் எஸ்.எம்.அஹமட் தலைமையில் வாளியப்பா ஜும்ஆ பள்ளி வாசலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மௌலவி எஸ்.எல்.பரீட்... Read more »

கிளிநொச்சி கல்வி வலய செயலமர்வு இடைநிறுத்தம்!

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கிளிநொச்சி கல்வி வலயத்தின் அதிபர்கள் மற்றும் கல்வித்திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது. உலக வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்ற சாதாரண கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் அதிபர்கள், வலயக் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான தெளிவுபடுத்தல் செயலமர்வே இவ்வாறு... Read more »
error: Content is protected !!