யாழ் எழுதுமட்டுவாழ் பகுதியில் தும்புத் தொழிற்சாலையில் தீ!!

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் ஏ9 வீதிக்கருகாமையில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையில், தீ காரணமாக பல இலட்சம் ரூபா பெறுமதியான தென்னம் பொச்சுக்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம், இன்று மாலை ஏற்பட்டுள்ளது. தும்புத் தொழிற்சாலைக்கு அருகாமையில் காணப்படும் காட்டிற்கு, இனம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.... Read more »

கொரோனா தொடர்பில் சார்க் தலைவர்கள் ஆராய்வு!!

கொரோனா வைரஸ் தொற்று குறித்து, சார்க் நாடுகளின் தலைவர்கள், காணொளி மூலம் கலந்துரையாடியுள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசிப்பதற்காக, காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை இலங்கை, பாகிஸ்தான்... Read more »

கொரோனா சந்தேக நபர்களை மன்னார் ஊடாக கொண்டு சென்றமைக்கு மக்கள் எதிர்ப்பு!!

கொரோனா வைரஸ்; தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு, மன்னார் மாவட்டத்திற்கு அழைத்து வரப்படுவதாக பரவிய தகவலின் அடிப்படையில், அதற்கு எதிராக, மக்கள் வீதிமறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். இன்று மாலை 5.00 மணியளவில், மன்னார் பஸார் பகுதியில், பிரதான வீதியை மறித்து, போராட்டம் முன்னெடுத்தனர். போராட்டத்தின் போது,... Read more »

கொரோனா தாக்கம் – வடக்கு மாகாண ஆளுநர் விசேட பணிப்புரை!!

கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள், கிருமி நீக்கல் செயற் திட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். பொது மற்றும் தனியார் போக்குவரத்து... Read more »

உத்தர தேவி ரயில், தம்புத்தேகாமவில் நிறுத்தப்படும்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து, கொழும்பு இடையே சேவையில் ஈடுபடும் உத்தர தேவி ரயில், இன்று முதல் தம்புத்தேகாம ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. துமிந்தா திசாநாயக்க மற்றும் தம்புதேகம தொழிற்சங்கம் உட்பட, பல தரப்பினரின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்த முடிவு... Read more »

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக ஜீ.குணசீலன் தெரிவு!!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான, ‘தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்’ வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக, முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியக்கலாநிதி ஞானசீலன் குணசீலன் போட்டியிடுகின்றார். ஞானசீலன் குணசீலன், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பில்,... Read more »

கொரோனா – இலங்கை பாதிப்பு 11 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில், ஆய்வு கூட பரிசோதனைகளின் பின்னர், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 11 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோன தொற்று தொடர்பான வைத்திய பரிசோதனைகளின் கீழ் உள்ள நபர்களின் எண்ணிக்கை 133 ஆகும். இது, கடந்த 27-01-2020 அன்று சீன நாட்டுப்... Read more »

கொரோனா : யாழ். விமான நிலையம் மூடப்பட்டது!

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும், இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்படுவதாக, சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை, உடன் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த... Read more »

யாழ். இலுப்பையடியில் திருட்டு : ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் இலுப்பையடி சந்திப் பகுதியில், பகல் வேளையில் அத்துமீறி நுழைந்து திருட்டில் ஈடுபட்ட, கொடிகாமத்தை சேர்ந்த நபர் ஒருவர், யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று, இலுப்பையடி சந்திக்கு அண்மையில், பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து, தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை... Read more »

மணல் அகழ்விற்கு மக்கள் எதிர்ப்பு!!

இரத்தினபுரி பலாங்கொடை வெலி ஓயா பிரதேசத்தில், மணல் அகழ்விற்கு எதிராக, பிரதேச மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த மணல் அகழ்வு சுரங்கத்தை, அப்போதைய மாகாண நீர்ப்பாசன அமைச்சர் சோய்சா, 2016 ஆம் ஆண்டில், வெலி ஓயா அனிகட்டில் ஆரம்பித்து வைத்துள்ளார். இரண்டு மாதங்களாக,... Read more »
error: Content is protected !!