முல்லைத்தீவில் ரெலோ அமைப்பின் மாவட்டப் பணிமனை திறந்து வைப்பு!

முல்லைத்தீவில் தமிழீழ விடுதலை இயக்கம் அமைப்பினுடைய மாவட்டப் பணிமனை இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – உணாப்பிலவுப் பகுதியில் அமைந்துள்ள குறித்த மாவட்டப் பணிமனையினை, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் திறந்து வைத்தார். இந் நிகழ்வில் விருந்தினர் வரவேற்பு, மங்கல விளக்கேற்றல்,... Read more »

அம்பாறை, மட்டு மாவட்டப் பாடசாலைகளின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் !

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கோளாவில் பெருநாவலர் கனிஸ்ட வித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று மாலை நடைபெற்றது. மகாவித்தியாலயத்தின் அதிபர் வெ.கனகரத்தினம் தலைமையில், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் விசேட அதிதிகளாக திருக்கோவில் வலய... Read more »

மட்டு. காத்தான்குடி மகளிர் அரபுக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!

மட்டக்களப்பு காத்தான்குடி மஹ்ஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வும் நேற்று மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் எம்.சி.எம்.றிஸ்வான் மதனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காத்தான்குடி பிரதேச செயலக உதவிப்... Read more »

சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் யாழில் விழிப்புணர்வு!

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கக்கோரி, யாழ்ப்பாணத்தில் மாணவர்கள், பெண்கள் இணைந்து கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை இன்று முன்னெடுத்தனர். இப் பேரணியானது யாழ்ப்பாணம் பண்ணை முற்றவெளிப் பகுதியில் இருந்து ஆரம்பமாகி, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கினை சென்றடைந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணியில்... Read more »

தமிழ்க் கட்சிகள் ஒட்டகத்தை குடிசைக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றன – எஸ்.தேவராஜா

தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணி, குடிசைகளுள் ஒட்டகத்தை நுழைக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவ்வமைப்பின் உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.தேவராஜா இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நெல் கொள்வனவு!

இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட செயலகங்கள் ஊடாக நெல் கொள்வனவு இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணம், வன்னி, கிழக்கு மாகாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மேற்குப் பிரதேசங்களில் அமைந்துள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகங்களில் சேவை புரியும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன், நெல் சந்தைப்படுத்தும்... Read more »

மட்டக்களப்பில் சுயதொழில் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி!

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களின் சுயதொழில் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும், பொருட்களின் விற்பனைக் கூடங்களும் நேற்று திறந்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் பெண்களைக் கொண்ட காவியா பெண்கள் சுயதொழில் நிறுவனம், பெண்களின் சுயதொழில் உற்பத்திகளை... Read more »

மட்டக்களப்பு ஏறாவூர் பைஸானுல் மதீனா அரபுக் கல்லூரியின் முப்பெரும் விழா

மட்டக்களப்பு ஏறாவூர் பைஸானுல் மதீனா அரபுக்கல்லூரியின் ஆலிம்கள், ஹாபிழ்கள் கௌரவிப்பு மற்றும் 8 ஆவது தலைப்பாகை சூடுதல் ஆகிய முப்பெரும் விழா நேற்றிரவு நடைபெற்றது. அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி பி.எம்.ஏ.ஆயு ஜலீல் பாகவி தலைமையில், மௌலவி அப்துல் றஹீம் நூரி முன்னிலையில் கல்லூரி... Read more »

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் திட்டம் – பிரதமர்

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு, வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு புதிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டிற்கு... Read more »

சம்பளக் கொள்கைகள் தயாரிப்பு குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஆணைக்குழு!

சம்பளக் கொள்கைகள் தயாரித்தல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக தேசிய சம்பள ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. தேசிய சம்பள ஆணைக்குழுவில் 15 பேர் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உபாலி விஜேவீரவின் தலைமையில் இந்த ஆணைக்குழு செயற்படவுள்ளது. அரசியலமைப்பின் 33... Read more »
error: Content is protected !!