யாழ் பல்கலைக்கழக பகிடிவதை- மாணவன் கற்கை நெறிகளில் ஈடுபட இடைக்காலத் தடை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்பப் பீடத்தில், மோசமான முறையில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மூத்த மாணவன் ஒருவருக்கு, மறு அறிவித்தல் வரை, பல்கலைக்கழக கற்கை நெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ முடியாதவாறு, இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவன் மீதான ஒழுக்காற்று... Read more »

யாழ் மாவட்ட செயலகத்தில் தொழில் சந்தை நிகழ்வு!

மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துடன் இணைந்து நாடாத்திய, மாபெரும் தொழில் சந்தை நிகழ்வு, இன்று நடைபெற்றது. இந்த தொழில் சந்தை, யாழ் மாவட்ட செயலகத்தில், இன்று கலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இடம்பெற்றது.... Read more »

மட்டு மண்முனை தென் மேற்கு கோட்டத்தில், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், கௌரவிப்பு!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மண்முனை தென் மேற்கு கோட்டத்திலுள்ள ஆறு பாடசாலைகளிலிருந்து கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது... Read more »

அரசினால், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது- ஜே.வி.பி

ஆர்ப்பாட்ட இடத்தை அமைத்து, அரசாங்கம் தொழிற்சங்க உரிமையை கொச்சைப்படுத்தியுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கப் பிரிவுத் தலைவர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். நேற்று, கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். உண்மையில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 69 இலட்சம் வாக்குகளை அளித்த... Read more »

அம்பாறை கல்முனையில், சுவரோவியங்கள் வரையும் பணிகள் முன்னெடுப்பு!

அம்பாறை மாவட்ட கல்முனை பிரதேசத்தை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் கல்முனை மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மதில்களில் சுவரோவியங்கள் வரையும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்முனை பிராந்திய இராணுவ முகாம் பொறுப்பதிகாரி சுதுசிங்க மற்றும் நேசன் ரிடர்ஸ் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் ஜெ.கிசாந்தன்... Read more »

சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், புதிய அரசியல் கூட்டணி அமைக்கத் தீர்மானம்!

4 கட்சிகள் இணைந்த வகையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற புதிய அமைப்பு, நாளை யாழ்ப்பாணத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு, தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம்,... Read more »

முல்லைத்தீவில் வெடிப்பு சம்பவம் – ஒருவர் படுகாயம்!

முல்லைத்தீவு மாவட்டம் சிலாவத்தை மாதிரிக் கிராமம் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிலாவத்தை மாதிரிக் கிராமம் பகுதியில் இருந்து வியாபாரத்துக்கு என அபாயகரமான வெடி பொருட்களை எடுத்து வந்து கழற்றி விற்பனை செய்வதற்கு... Read more »

வேலைவாய்ப்பிற்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கவும் : 20 ஆம் திகதி வரை காலம் நீடிப்பு   

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு, தொழில் வாய்ப்பை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு, எதிர்வரும் 20 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. தொழிலை எதிர்பார்த்துள்ளவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள முதலாவது பட்டப்படிப்பொன்றை அல்லது அதற்கு சமமான தகைமையாக,... Read more »

அம்பாறை கண்ணகி கிராமம் கண்ணகி வித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டி!

அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கண்ணகி கிராமம் கண்ணகி வித்தியாலய திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று மாலை நடைபெற்றது. மகா வித்தியாலயத்தின் அதிபர் ரி.இராசநாதன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் பிரதம அதிதியாக... Read more »

அம்பாறையில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம்!

அம்பாறை மாவட்டத்தில் நிந்தாவூர், சம்மாந்துறை, நாவிதன்வெளி, சவளக்கடை, 13 ஆம் கொலனி, மத்திய முகாம், சொறிகல்முனை, மல்வத்தை, உஹன, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, கோமாரி, தம்பிலுவில், உள்ளிட்ட பல விவசாயப் பகுதிகளில் சிறுபோக நெல் அறுவடையை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளம்... Read more »
error: Content is protected !!