நகரை தூய்மையாக வைத்திருக்கும் நடவடிக்கைகள் தொடரும் : சமல்!!

நகரங்களின் சுத்தத்தை பேணுவதற்கு, பொலிஸார் விருப்புடன் செயலாற்றுவதாக, மகாவலி அபிவிருத்தி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு, நுகர்வோர் நலன்கள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பொலிஸ் திணைக்களத்தின் சுற்றுச்சூழல் பிரிவு,... Read more »

நாமல் ராஜபக்ஷ அங்கத்துவம் நிச்சயம் – மரிக்கார்!!

19 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்து, நாட்டை, ஒரு குடும்பத்திடம் கையளிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பு நாரேஹன்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார். 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி நாம் ஆட்சிக்கு... Read more »

மட்டு, லியோ கழகத்தின் ஏற்பாட்டில், விழிப்புணர்வு சைக்கிள் சவாரி!!

இலங்கையின் 72 வது தேசிய சுதந்திர தினத்தினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு லியோ கழகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு சைக்கிள் சவாரி முன்னெடுக்கப்பட்டது. தேசத்தையும், தேசிய கொடியையும் மதித்து நம் இலங்கையர் எமது தேசத்தை நாம் நேசிப்போம் என வலியுறுத்தி மட்டக்களப்பு லியோ கழகத்துடன் ,... Read more »

இன்று பிறந்த பிள்ளைகளுக்கு யோகம்!!

இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு பரிசுப் பொதியும் 2000 ரூபா வைப்புப் பணமும் வழங்கப்பட்டன. அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு கல்முனை மக்கள் வங்கி முகாமையாளர் ஏ.எல்.ஏ.ஸலாம் தலைமையில் பரிசும்... Read more »

கண்டி பறகஹதெனிய அரபுக் கல்லூரியில், சுதந்திர தின நிகழ்வு!!

கண்டி பறகஹதெனிய அரபுக் கல்லூரியில், அதிபர் அபூபக்கர் சித்தீக் மதனி தலைமையில், சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது. மௌலவி எஸ்.எச்.எம்.இஸ்மாயீல் இலங்கையின் தேசிய தினம் தொடர்பில் விசேட உரை நிகழ்த்தியதுடன், மாணவர்கள் மத்தியில், மன உறுதியை ஏற்படுத்தும் வகையில், இலங்கை எங்கள் தாய் நாடு... Read more »

கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலில், சுதந்திர தின நிகழ்வு!!

கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் தாருல் உலூம் புர்க்ஹானிய அரபு கல்லூரியினர் இணைந்து நடத்திய, சுதந்திர தின நிகழ்வு, பள்ளிவாசல் முற்றத்தில் நடைபெற்றது. பள்ளிவாசலின் தலைவரும் பாக்கிஸ்தான் நாட்டு உயர்ஸ்தானிகராலயத்தின் வதிவிடப் பிரதிநிதியுமான அப்துல் மரைக்கார் தலைமையில், நிகழ்வு இடம்பெற்றது. பிரதம அதியாக,... Read more »

திருமலையில் இளைஞர்கள் சுதந்திர தின கொண்டாட்டம்!!

72 ஆவது சுதந்திர தினத்தை, திருகோணமலையில், இளைஞர்கள் வித்தியாசமான முறையில் முன்னெடுத்தனர். கிண்ணியாவின் பல பகுதிகளில், சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெற்ற போதிலும், அனைவரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், சில இளைஞர்கள் சுதந்திர தின நிகழ்வை நடத்தியுள்ளனர். கடலில் தொனியில் தேசியக் கொடியை ஏற்றி,... Read more »

திருமலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மரதன் ஓட்டப் போட்டி!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருகோணமலை கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களால், மரதன் ஓட்டப் போட்டி நடாத்தப்பட்டது. ‘சுகாதாரமானது, ஆரோக்கியமானதும், வளமான வாழ்க்கையை முன்னெடுப்போம்’ எனும் தொனிப்பொருளில், இந்த மரதன் ஓட்டப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான மரதன் ஓட்டப் போட்டி... Read more »

புதையல் தோண்டிய 8 பேர் திருமலையில் கைது!!

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு பகுதியில், புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில், 8 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை, கடற்படையின் உதவியுடன், இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் 25, 30 மற்றும் 40,... Read more »

மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!!

கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பினால் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் நடைபெற்றது. இந்த பேரணியில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு,... Read more »
error: Content is protected !!