வவுனியாவில் ‘ஏர்முனை’ சஞ்சிகை வெளியிட்டு வைப்பு!!

இயற்கை விவசாயத்துடன் தொடர்புடைய ஏர்முனை சஞ்சிகை வெளியீட்டு விழா, வவுனியா வெளிக்குளம் பாடசாலை மண்டபத்தில் இன்று நடாத்தப்பட்டது. அமுதம் சேதன விவசாய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் பா.நேசராஜா தலைமையில் குறித்த நிகழ்வுகள் நடைபெற்றன. இயற்கைவழி இயக்கம், நெடுங்கேணி பண்ணையாளர் சங்கத்தின் வெளியீடாக... Read more »

தமிழ் மக்களை சினம் கொள்ள வைக்காதீர்கள்: அரசிடம் சஜித் கோரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு, தமிழ் மக்களையும், அதன் அரசியல் தலைமைகளையும் மேலும் சினம் கொள்ள வைக்கக் கூடாது என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தமிழ் மக்களும் தமிழ்த் தலைமைகளும் விரும்புகின்ற அரசியல் தீர்வை... Read more »

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் மாவீரர்களின் குடும்பங்களுக்கு உதவி!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில், மாவீரர்களின் குடும்பங்களுக்கான மாதாந்த உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரின் தலைமையில் இடம்பெற்ற உலருணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்வில், அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார்... Read more »

யாழில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து!

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் மக்கள் வங்கிக்கு முன்னால் உள்ள இரும்புப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்று தீப்பிடித்து பகுதியளவில் எரிந்துள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தில் உரிமையாளர் மதிய உணவுக்காக கடையினை மூடிவிட்டு சென்ற பொழுதே இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ... Read more »

யாழ்ப்பாணம் கொக்குவிலில் இரத்ததான முகாம்!

யாழ்ப்பாணம் – கொக்குவில் பொற்பதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. பொற்பதி சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில், குருதிக் கொடையாளர்கள் பலரும் ஆவலுடன் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர். இங்கு வழங்கப்பட்ட குருதிகளை யாழ்ப்பாணம் போதனா... Read more »

சிங்களம், தமிழ் மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் – ஹர்ஷ டி சில்வா

சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேசியகீதம் இசைக்கப்படுவது எம் அனைவரது மத்தியிலும் ஒற்றுமையும், அமைதியும் ஏற்படுவதற்கு பெரிதும் வழிவகுக்கும் என்று முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 1949 ஆம் ஆண்டின் பின்னர் 2015 ஆம் ஆண்டில்... Read more »

த.தே.கூட்டமைப்பு துரோகத்தின் ஏகப்பிரதிநிதிகள் : வீ.ஆனந்த சங்கரி

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அங்கீகரிக்கக் கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை, துரோகத்தின் ஏகப்பிரதிநிதிகளாக முன்மொழிவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், மூத்த அரசியல்வாதியுமான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். Read more »

எம்.சி.சி ஒப்பந்தம்: ஆராயவுள்ளார் அலைஸ்

இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் தென்னாசியா மற்றும் மத்திய ஆசியாவுக்கான தலைமைப் பிரதி உதவிச் செயலாளர் அலைஸ் வெல்ஸ், இலங்கையுடனான மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து பேச்சுக்களை மேற்கொள்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அலைஸ் வெல்ஸ் நாளை முதல் எதிர்வரும்... Read more »

அதிகாரங்கள் பகிர்வதற்கு மக்களின் ஆணை இல்லை!

தற்போதைய அரசுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான மக்கள் ஆணை வழங்கப்படவில்லை. ஆகவே அந்தச் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாத சூழல் காணப்படுகின்றது என மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வளித்து பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்திய பின்னரும்... Read more »

மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்க நலன்புரி சங்க உறுப்பினர்களின் வருட இறுதி ஒன்று கூடல் நிகழ்வு

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் ஞானசூரியம் சதுக்கம் கிராம சேவை பிரிவில் இயங்கி வரும் ஞானசூரியம் சதுக்கம் நலன்புரிச் சங்க உறுப்பினர்களின் வருட இறுதி ஒன்று கூடல் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வு சங்கத்தின் தலைவர் வைத்தியர் வி.விவேகானந்தராஜா தலைமையில்... Read more »
error: Content is protected !!