அம்பாறை தாண்டியடியில்,விபத்து 12 பேர் காயம்  

அம்பாறை மாவட்ட திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி தங்க வேலாயுதபுரம் சந்தியில், இன்று காலை தனியார் பேரூந்து கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 12 பேர் படுகாயமடைந்தள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, பொத்துவில் நகரில் இருந்து கல்முனை நகர்... Read more »

ஆளுநர் வெற்றிக்கிண்ணம் 2019

ஆளுநர் வெற்றிக்கிண்ணம் 2019 கரப்பந்தாட்ட, வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் யாழ்ப்பாணம் – ஆவரங்காலில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆளுநரின் எண்ணக்கருவில், வட மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வலைப்பந்தாட்ட மற்றும் கரப்பாந்தாட்ட அணிகளுக்கிடையிலான குறித்த போட்டிகள் ஆவரங்கால் நடராஜா இராமலிங்க... Read more »

மட்டக்களப்பில் விசேட செபமாலை நடைபவனி   

மட்டக்களப்பு மறை கோட்ட மரியாளின் சேனைகளின் செபமாலை நடை பவனி நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. அன்னை மரியாளின் மாதமாக ஒக்டோபர் மாதம் சிறப்பிக்கப்பட்டு விசேட நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றது. இதற்கு அமைய மட்டக்களப்பு மறைக்கோட்ட பங்குகளின் மரியாளின் சேனைகளின் ஏற்பாட்டில் அன்னை மரியாளின்... Read more »

பாரம்பரிய கலைகளை பாதுகாக்க நடவடிக்கை  

தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் பாரம்பரிய கலைகளை பாதுகாப்பதற்கு, மானிடத்திற்கான அரங்க இயக்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கமைய ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட சென்மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு, தப்புக்கலை பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டுள்ளது. தமிழர்கள் முக்கிய சடங்குகளின் போது பயன்படுத்தப்படும் தப்புக்... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியானது  

2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்க்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில்... Read more »

மன்னாரில்,’எதிர்பார்பின் இளைஞர் முகாம்’

‘எதிர்பார்பின் இளைஞர் முகாம்’ எனும் தொனிப்பொருளில், இளைஞர்களின் இயலளவு மற்றும் ஆளுமை விருத்திக்காக தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தும் இளைஞர் முகாம் மன்னாரில் நேற்று நடைபெற்றது. இளைஞர் கழகம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு தசாப்த நிறைவை கொண்டாடும் வகையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை... Read more »

ஜனாதிபதி தேர்தலை புறக்கணியுங்கள்: த.தே.ம முன்னணி அழைப்பு

விடுதலைப் போராட்டத்தின் சிந்தாந்தத்தின் கீழ், ஜனாதிபதித் தேர்தலினைப் புறக்கணித்து சர்வதேச சமூகத்திற்கு ஒரு செய்தியை நாம் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார். முல்லைத்தீவு வள்ளிபுணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். Read more »

இ.பே.ச பேருந்து விபத்து: சாரதி காயம்  

நுவரெலியா மாவட்டம் இராகலை – நுவரெலியா பிரதான வீதியில் ஐ பொரஸ்ட் முதலாம் இலக்க பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.... Read more »

யாழ், சங்கானையில் புதிய தபாலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டல்

வடக்கு அபிவிருத்தி அமைச்சின் 8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் சங்கானையில் அமைக்கப்படவுள்ள புதிய தபாலக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம் பெற்றது. அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி கலந்துகொண்டு தபாலக கட்டடத்திற்கான... Read more »

சிலம்பம் போட்டி வெற்றியாளர்கள் கௌரவிப்பு  

தேசிய ரீதியில் முதல் தடவையாக இடம்பெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றியீட்டிய முல்லைத்தீவு மாவட்ட வெற்றியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் அறிவொளி கல்வி நிலையத்தில் வட மாகாண சிலம்ப சங்கத்தின் செயலாளர் சூசைநாதன் யசோதரன் நெறிப்படுத்தலில், முல்லையூர் வன்னி... Read more »
error: Content is protected !!