மட்டு, புனித மிக்கேல் கல்லூரியின் மாபெரும் 8 ஆவது நடைபவனி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ் பெற்ற புனித மிக்கேல் கல்லூரியின், 8 ஆவது மாபெரும் நடைபவனி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. கடந்த ஏழு வருடமாக இந்த நடைபவனியை புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் பாடசாலை சமூகமும் இணைந்து நடாத்தி வருகின்றது. 8 ஆவது... Read more »

தமிழ் மக்களின் வாக்கு கோட்டாவுக்கே : திஸாநாயக்க

தமிழ் பேசும் மக்களின் வாக்குகள், அதிகளவில் கோட்டபாய ராஜபக்சவுக்கு கிடைக்கும் என, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ‘தமிழ் மக்களின் வாக்குகள் 20 இலட்சம் இருக்கின்றது. அதில் 15 இலட்ச வாக்குளில் டக்ளஸ் தேவானந்தா, வரதராஜப்பெருமாள், பிள்ளையான், விநாயகமூர்த்தி முரளிதரன், தொண்டமான் உள்ளிட்ட... Read more »

ரணில் – சஜித் இணைப்பா? மஹிந்த – கோட்டா இணைப்பா? : டிலான்

வடக்கு, கிழக்கு மக்களுக்கு, மஹிந்த – கோட்டா இணைப்பை மட்டுமே தெரிவு செய்ய முடியும் என, பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து, அண்மையில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்ட தேசியப்... Read more »

இலங்கையில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சி அல்ல பிக்குவின் ஆட்சி : சாந்தி காட்டம்!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில், நீதி நிலைநாட்டப்படாமல், தெற்கு அரசியல்வாதிகள் தேர்தல் நோக்கத்துடன், வடக்கு நோக்கி வருகை தரக்கூடாது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு hராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். இன்று, வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்... Read more »

யாழ், மல்லாகத்தில் சட்டத்தரணிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர்!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடியில், சட்டத்தரனி க.சுகாஸ் தாக்கப்பட்டமையை கண்டித்து, யாழ்ப்பாணத்தில் மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள், இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டம், மல்லாகம் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக, மல்லாகம் சட்டத்தரணிகள் சங்க தலைவர் சோமசுந்தரம் தேவராஜா தலைமையில் இடம்பெற்றது. இதன் போது, சட்டத்தரணிகள்... Read more »

வவுனியாவில், பாடசாலை ஒன்றிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியவரை கைது செய்யக் கோரிஆர்ப்பாட்டம்!

வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்திற்கு, அபகீர்த்தியை ஏற்படுத்திய நபரை கைது செய்யக் கோரி, பெற்றோர்கள் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில், தரம் 3 இல் கல்வி பயிலும் தனது மகள், பாலியல் துர்நடத்தைக்குள்ளதானதாக தெரிவித்து, குறித்த மாணவியின் தந்தையால், சமூக வலைத்தளங்களில்... Read more »

அம்பாறை, கோமாரியில் வைத்தியசாலையை தரமுயர்த்தக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் நிர்வாக எல்லைக்குட்பட்ட, பொத்துவில் கோமாரி மத்திய மருந்தகத்தினையும் மகப்பேற்று வைத்தியசாலையையும் தரம் உயர்த்தி, பூரணமான வைத்திய சேவையை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை கோமாரி பொது மக்கள் மேற்கொண்டனர். இவ்... Read more »

மட்டக்களப்பில், மார்ச் 12 இயக்கம் விசேட கலந்துரையாடல்!

அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஒருவரையே, இந்த நாட்டு மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என, மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது. மார்ச் 12 இயக்கம், அதன் பங்காளி அமைப்புகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல், நேற்று காலை தொடக்கம் மாலை... Read more »

வவுனியாவில் விபத்து : ஒருவர் படுகாயம்

வவுனியா மரக்கரம்பளையில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியாவில் இருந்து புதுக்குளம் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய... Read more »

ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால் நாடு மீண்டும் மோசமான நிலைக்கு செல்லும் – மஹிந்த

ஜனாதிபதி வேட்பாளர் சந்தர்ப்பத்திற்காக, மோதலில் ஈடுபட்டு வரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் ஆட்சிக்கு வந்தால், நாடு மீண்டும் மோதல் களமாகிவிடும் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தொழில் செய்து வருகின்ற... Read more »
error: Content is protected !!