தொடர்ந்து 36 மணித்தியாலங்களுக்கு 200 மில்லிமீற்றர் மழை

எதிர்வரும் 36 மணி நேரத்தில் மேல்,தென், சப்ரகமுவ மாகாணங்களில் 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பதாகவும், மத்திய, வடமேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.(சே) Read more »

தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி எனது முதல்-கோட்டபாய

குறுகிய காலத்திற்குள் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்ததை போன்று  பொருளாதாரத்தையும்,  தேசிய பாதுகாப்பினையும் பலப்படுத்துவோம் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார். கூட்டுறவு துறையின் தேசிய மாநாடு கொழும்பில் உள்ள தேசிய கண்காட்சி காட்சிப்படுத்தல் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை... Read more »

திருமலை, குச்சவெளியில் இராணுவத்தின் நீர்க்காகப் பயிற்சி நிறைவு!

இலங்கை உட்பட உலக நாடுகளின் படைகள் மற்றும் விசேட படையினர் கலந்துகொண்ட நீர்க்காக கூட்டுப் பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வு திருகோணமலை குச்சவெளியில் நேற்று மாலை இடம்பெற்றது. நீர்க்காக இறுதி தாக்குதல் பயிற்சியில் இலங்கை உட்பட 26 நாடுகளை சேர்ந்த சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான... Read more »

மஹிந்த – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சரா ஹூல்ரன், எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்சவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். நாட்டில் தற்போது புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய சூழ்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு... Read more »

பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக, முல்லைத்தீவு நீராவியடியில் மாபெரும் கண்டனப் பேரணி!

முல்லைத்தீவு – நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் வழங்கப்படுவதற்கு முன்னரே, பௌத்த மதகுருவின் சடலம் தகனம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.   நேற்று முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில், கொலம்பே... Read more »

மன்னார் வளைகுடாவில், 70 இலட்சம் பெறுமதியான கடல் அட்டைகள் பறிமுதல்!

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 70 இலட்சம் ரூபா மதிப்பிலான தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் கடத்தல்காரர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு கடத்த இருந்த 70 லட்சம் ரூபா மதிப்பிலான 350 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை... Read more »

கோட்டபாயவிற்கான அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்று இடைநிறுத்தி உத்தரவு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதின்றம் இடைநிறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டபாய ராஜபக்சவை எதிர்வரும் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜராகுமாறு... Read more »

நிர்வாக சேவையினர் பணிப்பகிஸ்கரிப்பு!

நிதியமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இன்று முதல் தொடர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் புஹாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மேலும் பல தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஸ்கரிப்பில்... Read more »

மன்னார் சட்டத்தரணிகளும் பணிப்பகிஸ்கரிப்பு!

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர். முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவங்களைக் கண்டித்து மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். இது... Read more »

போராட்டத்தில் யாழ் மாவட்ட சட்டத்தரணிகளும் பங்கேற்பு!

நீதிமன்ற அவமதிப்புக்கு எதிரான போராட்டத்தில் யாழ் மாவட்ட சட்டத்தரணிகளும் இணைந்து கொண்டுள்ளனர். முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில், நேற்று இடம்பெற்ற சம்பவங்களைக் கண்டித்தே, யாழ் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளதுடன், இன்றைய வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்திற்கு... Read more »
error: Content is protected !!