
முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதி ஜயந்த செனவிரட்ன, கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவ கட்டளை தளபதியாக கடமையாற்றிய மேயர் ஜெனரல் துஸ்ஜந்த ராஜகுரு, சேவைக்காலத்தை நிறைவு செய்து சென்ற நிலையில், புதிய இராணுவ கட்டளை தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று, முல்லைத்தீவு பாதுகாப்பு... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனை, அம்பன் மற்றும் நாகர்கோவில் தெற்கு பகுதிகளில், இன்று பெய்த கடும் மழை காரணமாக, வெங்காய செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில், மூன்றாவது தடவையாக பெய்த கடும் மழை காரணமாவே, இந்த அழிவு ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.... Read more »

தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் இரகசியங்களை, பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றஞ்சாட்டின் அடிப்படையில் கைதான நபரை, 3 இலட்சம் ரூபா சரீர பிணையில், அம்பாறை மாவட்ட கல்முனை நீதிவான் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. இன்று கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான்... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு, அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு, அவசியமான நேரத்தில் கிடைக்கும் என, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக்க அபேசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பு தனியார் பேரூந்து நிலையத்திற்கு அருகில், நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் இவ்வாறு குறிப்பிட்டார். ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு,... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 19 உறுப்பினர்கள், பதவிநிலை சமாதான நீதிவான்களாக, இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில், பதவிப்பிரமாணம் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செல்லையா பிரேமகாந், உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமேஜயந்த்,... Read more »

யாழ்ப்பாணம் தென்மராட்சி, மறவன்புலோ பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மின் காற்றாலையின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. தென்மராட்சி, மறவன்புலோ பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மின் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறவன்புலோ மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மறவன்புலோ பகுதியில் மின் காற்றாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து,... Read more »

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஜ.எஸ் தீவிரவாத அமைப்பினால், ஈஸ்டர் தினத்தன்று மத வழிபாட்டிடங்கள் மற்றும் விடுதிகள் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இக்குண்டுத்தாக்குதலில்... Read more »

கொழும்பு தாமரை கோபுரம் அமைக்க 2 பில்லியன் ரூபா பணம் சீன தேசிய இலக்ரேனிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் இதை தவிர ALIT நிறுவனத்திற்கோ அல்லது வேறு எந்த நிறுவனம் ஒன்றிற்கோ எவ்வித பணமும் வழங்கப்படவில்லை... Read more »

இவ் வருடம் இடம்பெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்பப் பிரிவில் தோற்றிய மாணவர்களுக்கு, செய்முறைப் பரீட்சைக்கான இலவச பயிற்சிக்கருத்தரங்கு நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா வடக்கு வலயங்கள், கிளிநொச்சி – துணுக்காய் வலயங்கள், மன்னார் – மடு வலயங்களில்... Read more »

மன்னாரில் 3ஆவது நாளாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை தடுக்க மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கம் விசேட போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. மன்னாரில் இருந்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான இலங்கை... Read more »