
சுயாதீன நீதிச்சேவை மூலமாக, 2000 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிடைக்கப் பெறாத, கண்டி மற்றும் மாத்தளை பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆயிரத்து 888 மில்லியன் ரூபா நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.... Read more »

சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு, சர்வதேச ஓசோன் தினம் மற்றும் மொன்றியல் உடன்படிக்கையின் 32 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்... Read more »

இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு, கொழும்பில் அமைந்துள்ள கடற்படை முகாமில் இடம்பெற்றது. உள்நாட்டு மற்றும் சர்வதேசத்தின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், கடந்த ஓகஸ்ட்... Read more »

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள, தெற்காசியாவின் மிக உயர்ந்த தாமரைக் கோபுரம், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால், இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு தாமரைக் கோபுரமானது, வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளின் அலைவரிசை ஒலிபரப்பை எண்மான அடிப்படையில் அதாவது டிஜிற்றல் முறையில், ஒரே இடத்திலிருந்து மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.... Read more »

இலங்கை போக்குவரத்து சபையினர், இன்று நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கமைவாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு அரசபோக்குவரத்து சாலை ஊழியர்களும் இன்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அரச உத்தியோகத்தர்கள் தங்களது பணிக்கு செல்ல முடியாத நிலைகாணப்பட்டதுடன் மாணவர்களும் பாடசாலை... Read more »

மட்டக்களப்பு மாநகர சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்ந்த செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுத்து வருவதாகவும், மாநகர சபை உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறி வருவதாகவும், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாநகர சபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி... Read more »

நுவரெலியா வட்டவலை விக்டன் தோட்டப் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 81 வயதுடை தாய், துணியால் கழுத்துப் பகுதியில் இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக, பிரேத பரிசோதனை முலம் தெரியவந்துள்ளதாக, வட்டவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 11 ஆம் திகதி,... Read more »

பொது மக்களின் முறைப்பாட்டை அடிப்படையாக கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 14 உணவகங்களுக்கு, சாவகச்சேரி பொது சுகாதார பரிசோதகர்கள், இன்று திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர். தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட,... Read more »

நுவரெலியா அக்கரப்பத்தனை அலுப்புவத்தை தோட்டத்தில், இரண்டு மாணவிகளின் உயிர்களை காவுகொண்ட பாலத்திற்கு பதிலாக, புதிய பாலம் ஒன்றை, பொது மக்கள் மற்றும் அக்கரபத்தனை பொலிஸார் இணைந்து, பாதுகாப்பு வேலியுடன் அமைத்துக் கொடுத்துள்ளனர். நுவரெலியா அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுப்புவத்தை தோட்டத்தில், கடந்த மூன்று மாதங்களுக்கு... Read more »

வவுனியா மாவட்ட சுகாதார தொண்டர்களுக்கு, நேர்முக தேர்வுக்கான விண்ணப்பபடிவங்கள், இன்று காலை முதல் வழங்கப்பட்டு வருகின்றன. வடக்கு மாகாணத்திற்கு, சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேரை நியமிப்பதற்காக, கடந்த மாதம் இடம்பெற்ற நேர்முகத்தேர்வுகள் மற்றும் அதனுடைய பெறுபேறுகள் அனைத்தையும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்... Read more »