வேட்பாளரின் வயதெல்லையை 70 ஆக மட்டுப்படுத்த என்.பி.பி யோசனை.

தேர்தல் ஒன்றில் வேட்பாளராக போட்டியிடுபவரது அதிகபட்ச வயதெல்லையாக 70 வயதைக் கொண்டுவருவதற்கான யோசனை ஒன்றை தேசிய மக்கள் சக்தி அமைப்பு முன்வைத்துள்ளது. தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை உள்வாங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. தற்பொழுது அவ்வமைப்பின் கூட்டணி அமைப்புக்கள், கட்சிகள் இணைந்து தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்கும்... Read more »

அமைச்சர் அர்ஜீண ரணதுங்க பலாலி விமான நிலையத்திற்கு திடீர் வருகை.

சிவில் விமான மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜீண ரணதுங்க இன்று திடீர் விஜயமாக வருகை தந்து பலாலி விமான நிலைய புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். எதிர்வரும் ஒக்டோபர் 15ம் திகதி பலாலி விமான நிலையம் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில் அதன் புனரமைப்பு பணிகளின்... Read more »

தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்பவருக்கே எமது ஆதரவு – சஜித் தரப்பிற்கு இரா.சம்பந்தன் பதில்.

யார் வேட்பாளர் என்பதில் எமக்கு பிரச்சினை கிடையாது தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு எந்தமாதியான தீர்வினை 2020 ஜனாதிபதி வழங்கப் போகின்றார் என்பதே எமக்குள்ள பிரச்சினை. தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்று. எமது நிபந்தனைகளுக்கு இணங்கி எம்முடன் பேசும் வேட்பாளருக்கு எமது ஆதரவினை... Read more »

நுவரெலியா பொகவந்தலாவ தோட்டப்பகுதியில் சிறுத்தைப் புலிக்குட்டி மீட்பு

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்தியபிரிவு தோட்டபகுதியில் உள்ள மரம் ஒன்றின் அடிவாரத்தில், சிறுத்தை புலிக்குட்டி ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுத்தைப் புலிக்குட்டி இன்று பிற்பகல் நான்கு மணியளவில் இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆட்டுக்கு புல் அறுக்க சென்ற நபர்... Read more »

இந்தியாவின் ஆந்திராவில் படகு கவிழ்ந்தது. காணாமல் போனோரை தேடும் பணி தீவிரம்.

இந்தியா ஆந்திர மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த படகில் 61 பேர் வரையில் பயணித்துள்ளனர். இவர்களில் 24 பேர் மீட்கப்பட்டுள்ளனர் ஏனைய 37 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 30 பேர் கொண்ட... Read more »

தமிழ் முஸ்லிம்களுக்கு இடையே கருத்து முரண்பாடுகளை களைவதற்கு கலந்துரையாடல்

சமாதானமும் சமூகப்பணியும் நிறுவன வழிகாட்டலின் கீழ் தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையிலான கருத்து முரன்பாடுகளை களைந்து சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலைய கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. சமாதானமும் சமூகப்பணியும் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் தலைவர்... Read more »

ஹட்டன் விக்டன் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டியின் மகனுக்கு விளக்கமறியல்.

நுவரெலியா ஹட்டன் விக்டன் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட 81 வயதுடைய மூதாட்டியின் மகன் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சஞ்சீவ பொன்சேகா முன்னிலையில் குறித்த மூதாட்டியின் சடலம் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டிருந்தது. நோய்வாய்ப்பட்டிருந்த 81 வயதுடைய... Read more »

டிக்கோயா தமிழ் மகாவித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹட்டன் டிக்கோயா தமிழ் மகாவித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன், உலக சைவ திருச்சபையின் தலைவரும், கனடா பெரிய சிவன் ஆலயத்தின் தர்மகர்த்தாவுமான கலாநிதி அடியார் விபுலானந்தா, கனடா... Read more »

கண்டி திகன வழிப்பிள்ளையார் கோவிலுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

கண்டி திகன அழுத்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வழிப்பிள்ளையார் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா, கோவிலின் அறங்காவலர் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன்போது, குண்டசாலை தேர்தல் தொகுதி... Read more »

கண்டியில், இன நட்புறவை மேம்படுத்தும் நோக்குடன் பாதயாத்திரை

கண்டி பரகஹதெனிய லெவன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 41 வருட நிறைவை முன்னிட்டு, நாட்டின் இன நட்புறவை மேம்படுத்தும் நோக்குடன் சமாதானப் பாதயாத்திரை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை உடல் ஆரோக்கியத்துக்கு மிகச்சிறந்த ஆதாரமாக விளங்கினாலும், ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணிப்பாதுகாக்க விளையாட்டு வீரர்கள் யாவரும்... Read more »
error: Content is protected !!