ஏறுகிறது பாணின் விலை!

இன்று நள்ளிரவு முதல், 450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 2 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலையானது 5.50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், ஏனைய பேக்கரி உணவுப்... Read more »

யாழ், சாவகச்சேரியில் விபத்து : இளைஞன் பலி

யாழ். சாவகச்சேரி – ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில், இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம், இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்த தனியார் சொகுசு பேருந்துடன், மோட்டார் சைக்கிளில் மோதியதில் விபத்து... Read more »

ஐ.தே.க வேட்பாளர் மக்களால் தெரிவு : மங்கள

ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டி தேவை இல்லை எனவும், ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரை மக்கள் தெரிவு செய்துவிட்டார்கள் எனவும், நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த வேளை, அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி... Read more »

யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் கல்வி அமைச்சினால், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு பெயர் பட்டியலுக்கு எதிராக, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கான ஆட்சேர்ப்பு பட்டியலில், வடக்கு மாகாணத்தை சேர்ந்தோர் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக, எமது... Read more »

மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் ஆவணங்களில் ஜனாதிபதி கைசாத்து

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்காக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக, சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணங்களில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று கைச்சாத்திட்டார். அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக,... Read more »

கூட்டமைப்பின் கோரிக்கை நிறைவேறாது : மஹிந்த

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றாது என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீதிக்கான குரல் என்ற தொனிப்பொருளில், கொழும்பு பத்தரமுல்லையில் ரணில் – மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தில் பழிவாங்கலை எதிர்கொண்ட அரச அதிகாரிகளுக்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மாநாடு ஒன்றை... Read more »

தற்கொலை எண்ணமா? 1333ஐ தொடர்புகொள்ளவும்!

1333 எனும், தற்கொலைக்கு எதிரான இலவச உள ஆலோசனைக்கான தெலைபேசி இலக்கத்தை, மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக, பல்வேறு நிகழ்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், திருகோணமலையில் நேற்று விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில், நாள் ஒன்றுக்கு 8 பேர் வரை தற்கொலை... Read more »

நுவரெலியாவில் தொடரும் குளவிக்கொட்டு : 55 தொழிலாளர்கள் பாதிப்பு

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலா நோர்வுட் ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லொய்னோன் லின்போட் தோட்டபகுதியில் 35பெண் தொழிலாளர்கள் மற்றும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் எல்பட மேல்பிரிவு தோட்டபகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 20 பெண் தொழிலாளர்கள் உட்பட 55 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி... Read more »

திருமலையில், புகைப்பட கலைஞர்கள் கௌரவிப்பு!

திருகோணமலை புகைப்பட கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் புகைப்படங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. திருகோணமலை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தினருடைய ஏற்பாட்டில், திருகோணமலை நகரசபை திறந்த மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. புகைப்பட கலைஞர்கள் சங்கத்தினருடைய அங்கத்தவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், திறந்த போட்டியாளர்கள்... Read more »

இந்த அரசில் குறைகள் இருக்கின்றது -அமைச்சர் ராஜித

நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு அளித்த சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் ராஜிதா சேனரத்ன தெரிவித்திருக்கின்றார் மொனராகலயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். நாம் அந்த இருண்ட காலத்தை மாற்ற எவ்வாறு பாடுபட்டோம் என்பதை இன்னும் மறக்கவில்லை அதன்... Read more »
error: Content is protected !!