ஜனாதிபதியை சந்தித்தார், புதிய இராணுவத் தளபதி

இலங்கை இராணுவத்தின் 23 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இன்று முற்பகல், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், அரச தலைவரை சந்திக்கும் சம்பிரதாயத்தின்படி இந்த சந்திப்பு இடம்பெற்றது.... Read more »

மட்டக்களப்பில் பதற்ற நிலை : தற்கொலை குண்டுதாரியின் உடலை புதைத்ததற்கு எதிராக போராட்டம்

சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி காத்தான்குடியை சேர்ந்த ஐஸ்ஐஸ் பயங்கரவாதியான முகமட் ஆசாத் என்பரின் உடல் பாகத்தினை மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கள்ளியங்காடு இந்து மயானத்தில் நேற்று மாலை புதைக்கப்பட்டதற்கு எதிராக அப்பகுதியில் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது. நேற்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த... Read more »

இன்டர்போல் பொதுச் செயலாளர், ஜனாதிபதிக்கு பாராட்டு

ஏப்ரல் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்துடன் தொடர்புடைய, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தல் உள்ளிட்ட, அந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து, இன்டர்போலின் பொதுச் செயலாளர் ஜேர்கென் ஸ்டோக், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் முப்படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கும்,... Read more »

அம்பாறை ஆலையடிவேம்பில், திரிய பியச நிகழ்வு

இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள சமூக அபிவிருத்தி பிரிவினரால் முன்னெடுக்கப்படும் திரிய பியச வீடமைப்பு வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு ஏற்பாடு செய்த திரிய பியச வீடமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று... Read more »

2019 ஆம் ஆண்டுக்கான, மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக்கூட்டம்

2019 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர் வை.பி.இக்பால் ஒழுங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர்... Read more »

சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் : மல்கம் ரஞ்ஜித்

ஏப்ரல் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், சுயாதீன ஆணைக்குழுவை அமைத்து, விசாரணை நடத்தப்பட வேண்டும் என, கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். இன்று, கண்டிக்கு விஜயம் செய்த வேளை இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, இத்தாலி ஆயர் சபையின்... Read more »

மைத்ரி – மகிந்த இடையே மீள் இணக்கப் பேச்சு நடத்த தீர்மானம்!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையே, மீள் இணக்கப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு, சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது, இணக்கம் எட்டப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான 7 ஆவது... Read more »

உலக சேர்பிங் தரப்படுத்தலுக்கான போட்டிகள், அறுகம்பையில்

உலகில் கடலலை நீர் சறுக்கலுக்கு புகழ் பெற்ற இடங்களில் ஒன்றான பொத்துவில் அறுகம்பையில், உலக சேர்பிங் தரப்படுத்தலுக்கான போட்டிகள், மிகவும் பிரபல்லியமான இலங்கை மற்றும் வெளிநாட்டு வீரர்களின் பங்கு பற்றுதலுடன் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. அறுகம்பையில் எதிர்வரும் செப்படம்பர் 23 ஆம் திகதி... Read more »

மட்டு, குருமண்வெளியில், முதியோர் நலன் தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட குருமண்வெளி சீர்பாததேவி முதியோர் சங்கத்தின் கூட்டம், இன்று முதியோர் சங்கத்தலைவர் கோ.நடராசா தலைமையில் நடைபெற்றது. இதில் கிராமசேவை உத்தியோகத்தர் தவராசா சோவதாஸ், சமூகசேவை உத்தியோகத்தர் இராசதுரை கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மண்முனை தென் எருவில் பற்றுபிரதேசத்தில்... Read more »

மட்டு, ஆயித்தியமலை புனித சதாசகாய மாதாவின் வருடாந்த திருவிழா கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே அமைந்துள்ள புகழ்பெற்ற ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 65 ஆவது வருட திருவிழா எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இத் திருவிழாவின் முன் ஏற்பாடுகள் தொடர்பான இரண்டாம் கட்ட இறுதிக் கூட்டம் இன்று மண்முனை... Read more »
error: Content is protected !!