யாழ் நல்லூரில், மஞ்சி நிறுவனத்தின் சிறப்பு காட்சியறை

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, மஞ்சி நிறுவனம், ஆலய வளாகப்பகுதியில் விசேட காட்சியறையை அமைத்துள்ளது. அதனடிப்படையில், விசேட காட்சியறை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதன் போது, சமயக் கிரிகைகள் இடம்பெற்று காட்சியறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. காட்சியறையை மஞ்சி நிறுவன... Read more »

என்மீதான குற்றச்சாட்டுக்கள் வெறும் குற்றச்சாட்டுக்கள் : புதிய இராணுவத் தளபதி

வடக்கில் இருந்து ஒரு படை முகாமைக்கூட அகற்றப் போவதில்லை என, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய இவ்வாறு குறிப்பிட்டார். இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர், அவர் கலந்துகொள்ளும் முதலாவது ஊடக சந்திப்பு இதுவாகும். ஆயுதப்போர்... Read more »

கோட்டபாய ஜனாதிபதியானால், 13 வது திருத்தம் அமுல் : டக்ளஸ்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதுடன், 13 ஆவது திருத்தச்சட்டம், 6 மாத காலப்பகுதிக்குள் முழுமையாக அமுல்படுத்தப்படும் என, பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று, யாழ்ப்பாணத்தில்... Read more »

சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொட்பில், ஐ.நா விசேட அறிக்கையாளர் கருத்து

அரசியலமைப்பின் பிரகாரம், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை, சர்வதேச சட்டங்கள் எதிர்க்கவில்லை எனவும், ஆனால் சிறுபான்மை மக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்து உறுதிப்படுத்துவது அவசியமானது எனவும், மதச்சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்... Read more »

ஜனாதிபதியானாலும் தெரிவுக்குழுவில் முன்னிலையாக வேண்டும் : முன்னாள் இராணுவ தளபதி

ஏப்ரல் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான, பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளுக்கு அழைத்தால், மீண்டும் முன்னிலையாக தயார் என, ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவ தளபதியான கடமை புரிந்த ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, அண்மையில் ஓய்வு பெற்ற... Read more »

பாதுகாப்பு தொடர்பில் திருப்தியில்லை : ஜி.எல்.பீரிஸ்

ஏப்ரல் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னரான, நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விசாரணைகளில் திருப்தி கொள்ள முடியவில்லை என, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை நீக்குவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் போது,... Read more »

டான் செய்திகள் சுட்டிக்காட்டியமையால், மாங்குளத்தில் மண்ணெண்ணை விநியோகம்

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் எரிபொருள் விற்பனை நிலையத்தில், மண்ணெண்ணை விற்பனை நடைபெறாததால் பொது மக்கள் அவதியுறுகின்றனர் என்ற விடயத்தை எமது செய்திப் பிரிவு சுட்டிக்காட்டிய நிலையில், மீண்டும் மண்ணெண்னை விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்னை விநியோகம் தடைப்பட்ட விடயத்தை எமது செய்திகளின் ஊடாக வெளிப்படுத்தி, சம்மந்தப்பட்டவர்கள்... Read more »

கடுமையான குற்றங்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு !

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும், கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுக்களை புரிந்தமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை, காலியில் உள்ள பூசா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில், காலி பூசா சிறைச்சாலையில் உள்ள சிறைக் கட்டடங்களின் கட்டமைப்பில், தேவையான மாற்றங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக,... Read more »

சரத் விஜேசூரியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் சரத் விஜேசூரியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், வழக்கை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு, மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.... Read more »

ஐ.நா அதிகாரிகள், முஸ்லிம் சமய கலாசார அமைச்சுக்கு விஜயம்

இலங்கையின் சமய விவகாரம் தொடர்பாக அறிந்து கொள்ள, ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள், முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சுக்கு, நேற்று விஜயம் மேற்கொண்டனர். இலங்கை அரசாங்கத்தின் விசேட அழைப்பை ஏற்று, இலங்கையில் மத உரிமையைப் பேணிப் பாதுகாக்கும் விடயத்தில், இலங்கையில்... Read more »
error: Content is protected !!