ஜனாதிபதி அடுத்த மாதம் அமெரிக்கா விஜயம்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்காவுக்கு அடுத்த மாதம் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அங்கு உலக நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய சந்திப்புக்களை நடத்தவுள்ளார். செப்டெம்பர் 17 முதல் 27 வரை, நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்... Read more »

ஜனாதிபதியின் புதல்வியின் வாகனம் விபத்து!

ஜனாதிபதியின் புதல்வியின் வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில், ஒருவர் காயமடைந்துள்ளதுடன், வாகனத்தின் சாரதியான கமாண்டோ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் புதல்வி சத்துரிக்கா சிறிசேனவின் வாகனத் தொடரணியின், டிபெண்டர் பாதுகாப்பு வாகனம், நேற்று புத்தலவில் விபத்துக்குள்ளாகியதில், ஓட்டோ சாரதி ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பில் டிபெண்டரின்... Read more »

புதிய ரயில்கள், சீனாவில் இருந்து இறக்குமதி

10 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில், புதிய ரயில்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்scட கிளாஸ் எஸ் 14 ரயில்கள், இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளன. ரயில்வே திணைக்களம், இந்த ரயில்களை மலைநாட்டு ரயில் பாதையில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதேபோன்ற... Read more »

கூட்டமைப்பு, ஐ.தே.க வேட்பாளரை ஆதரிக்கும் : ஆனந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தியா புதுடில்லியில் இராஜதந்திரிகளுடன் பேச்சு நடத்துவார் என, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இன்று, வவுனியாவில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.... Read more »

அமைச்சர் மனோ கணேசன் எச்கரிக்கை

தங்களுக்கு உடன்பாடு இல்லாத வேட்பாளரை, ஜனாதிபதி தேர்தலில் கொண்டு வந்தாலோ, தேவையில்லாமல் உட்கட்சி சண்டையிட்டாலோ, தாம் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என, அமைச்சர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மாத்தறை – தெனியாவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.... Read more »

பிரதமர் ரணில், நாளை வடக்குக்கு விஜயம்

நாளை, வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். வவுனியா பொது வைத்தியசாலையில், இரண்டாவது சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை, மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கவுள்ளார். இதன் போது, நெதர்லாந்து... Read more »

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயார் : பொன்சேகா

ஜனாதிபதி வேட்பாளர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைத்துவம் கேட்டால், ஒப்புக்கொள்ள தயார் என, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா, நாட்டின் பொறுப்பை ஏற்கும் திறன் எனக்கு... Read more »

பொதுஜன பெரமுன சென்றவர்களின் உறுப்புரிமை இரத்து : ஸ்ரீ.சு.க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உட்பட 60 பேரின் உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானம் எடுத்துள்ளதாக, ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமைத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து,... Read more »

மட்டு, மண்முனையில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு விழிப்புணர்வு

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், சமுர்த்தி திணைக்களத்தின் சமுர்த்தி சமூக மட்ட அமைப்புக்களை பலப்படுத்தும் நோக்குடன் விழிப்பூட்டும் செயற்திட்டம், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர், உதவி பிரதேச acசெயலாளர் போன்றோரின் ஒழுங்கமைப்புக்கமைவாக இன்று ஆரம்பமாகியது. சமுர்த்தி திணைக்களத்தின் சமுர்த்தி சமுதாய அடிப்படை... Read more »

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க கோரிக்கை!

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற, தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து, இலங்கை நாட்டுக்கான சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்ததை முன்னிட்டு, தொடர்ந்தும் இலங்கைக்கு, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் மேற்கொள்ள வலியுறுத்தி, கடந்த 6 ஆம் திகதி, கிளிநொச்சி பகுதியில்... Read more »
error: Content is protected !!