ஜனாதிபதி தலைமையில் இலங்கை-கம்போடியா வர்த்தக மாநாடு!

கம்போடிய நாட்டின் விசேட அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு அரசமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இலங்கை மற்றும் கம்போடிய வர்த்தகர்களின் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. புனோம் பென் நகரில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கம்போடிய பிரதமரும் கலந்துகொண்டார். இதன்போது இலங்கை மற்றும் கம்போடியாவிற்கிடையில் வர்த்தக... Read more »

யாழில் விபத்து-ஒருவர் உயிரிழப்பு!(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் உரும்பிராய் – கோப்பாய் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும், டிப்பர் வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை உரும்பிராய் கிருஸ்ணன் கோவிலடியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்று சடுதியாக வீதியைக் கடந்த நிலையில், பிரதான வீதியில்... Read more »

நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்று வீசும்!

நாட்டின் பல பகுதிகளிலும், கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம்... Read more »

கை அகற்றப்பட்ட விவகாரம்: உடன் விசாரணைக்கு உத்தரவு!

புத்தளம் – மாரவில வைத்தியசாலையில் கர்ப்பப்பையை அகற்றும் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கையொன்றை அகற்றிய சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக சுகாதார... Read more »

சாவகச்சேரி தீ விபத்து:பொலிஸார் விசாரணை! (காணொளி இணைப்பு)

யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியில், சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மடத்தடி சந்தியில் அமைந்துள்ள கடைகள் தீ விபத்து காரணமாக தீக்கிரையாகியுள்ளன. குறித்த தீ விபத்தானது நேற்றிரவு 9 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு,தீ விபத்தில் பழக்கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும், அருகில்... Read more »

புதிய பயிற்றுவிப்பாளருடன் களமிறங்கும் இலங்கை அணி!

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ருமேஸ் ரத்நாயக்க பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டமையை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டித் தொடர் தொடர்பில் நடைபெற்ற... Read more »

காஸ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் நெருக்குதல்!

ஜம்மு-காஸ்மீர் தொடர்பில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவைக் கண்டித்து, இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக ரீதியிலான உறவை முறித்துக்கொள்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஜம்மு-காஸ்மீர் தொடர்பில் இந்திய மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு தொடர்பில், நேற்று இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புக்குழு கூட்டத்தின்... Read more »

வவுனியாவில் கடும் காற்று:06 வீடுகள் சேதம்!

வவுனியாவில் நேற்று திடீரென வீசிய கடும் காற்று காரணமாக 06 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 18 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மதியம் திடீரென கடும் காற்று வீசியது. இதனால் வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக... Read more »

யாழ்.ஏழாலையில் 65 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது! (காணொளி இணைப்பு)

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில், சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலைய, புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, ஏழாலை சிவகுரு பகுதியில் உள்ள வீடு ஒன்றில், சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர்... Read more »
error: Content is protected !!